உலகையே இணைக்கும் செயலைச் செய்து கொண்டிருக்கும் ஆப்ஸ்- வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர். இதில் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாகிப் போனது. நம்மில் பலர் இதில் வரும் செய்திகளை அதிகளவு பகிர்ந்து கொள்வோம். அதில் எது உண்மை, எது பொய் என்றே தெரியாது.

ஃபேஸ்புக்கில் பல பொய்யான (fake) தகவல்கள் வருவது போன்றே, வாட்ஸ் ஆப்பிலும் பல தகவல்கள் வரத் தொடங்கின. ஆனால், "ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, வாட்ஸ் ஆப்பையே கடித்த" கதையாக 'WhatsApp Golden Version 4.0' எனும் பெயரில் ஒரு போலி தகவல் பரப்பப்படுகிறது.

• வாட்ஸ் ஆப் வீடியோ கால்
• தெரியாமல் தவறுதலாக அனுப்பிய மெசேஜை டெலீட் செய்து கொள்ளலாம்.
• ஒரே நேரத்தில் 100 படங்களை அனுப்பலாம்.
• ஃப்ரீயாக ஃபோன் கால் செய்யலாம்
• வாட்ஸ் அப்பில் தீம்களை மாற்றலாம்
• இலவசமாக SMS அனுப்பலாம்.
• யார் யார் நம் டி.பி ஸ்டேட்டஸ் பார்த்தார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம் - இவையெல்லாம் இதன் தனித்தன்மைகள் எனப் 'பீலா' விடுகிறது அந்த தகவல்.

நம் மக்களும் இதைப் பார்த்ததும் Smiley போல மாறி, அந்த லிங்க்கை க்ளிக் செய்கிறார்கள். அப்படி அந்த லிங்க்கை க்ளிக் செய்தால், ஒரு இணைய முகவரிக்குச் செல்லும். டவுன்லோட் செய்யலாம் எனப் பார்த்தால், 15 பேருக்காவது Friend request அனுப்பினால்தான் "Whatsapp version 4.0" ஐ டவுன்லோட் செய்ய முடியும் எனும் செய்தி வரும். இப்படி ஒரு வெர்ஷன் பற்றிய தகவல் அதிகாரப் பூர்வமாக வரவே இல்லையே, பிறகு எப்படி டவுன்லோட் செய்ய முடியும் என யோசிக்கக்கூட நேரமில்லாமல் உடனே 15 பேர் என்ன... 45 பேருக்கு அனுப்புவோம்.

சரி... அனுப்பி விட்டோம், டவுன்லோட் செய்யலாம் எனப் பார்த்தால், நாம் ஒன்றிரண்டு சர்வேக்களில் பங்கெடுத்தால்தான் டவுன்லோட் செய்யும் பக்கம் வரும் என்று காண்பிக்கும். இந்த சர்வேக்காளில், நம் பெயர் முகவரி, இமெயில் ஐ.டி, போன் நம்பர் கேட்கப்படும். இதில், இறுதியாக நம் தகவல்களை வேறு இணையதளங்களுக்குப் பகிர நாம் ஒப்புக் கொள்வது போல செய்தி இருக்கும். இவ்வளவு போராட்டத்திற்குப் பிறகும் "Golden WhatsApp" எட்டாக் கனியாகவே இருக்கும். நாமே அலுத்துப் போய் விட்டுவிடுவோம். பிறகுதான் விளையாட்டே உள்ளது!

தேவையில்லாத கால்கள், மெயில்கள், மெசேஜ்கள் எனப் பலவும் நம்மைத் துரத்தும். மெயிலையோ, மெசேஜையோ திறந்தால் நம் கணினியையும், மொபைலையும் வைரஸ் தாக்கும். நம் அந்தரங்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இதில் மிகவும் கொடுமையான விஷயம், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று பலபேருக்கும் இந்த தொல்லை நம்மால் ஏற்பட்டிருக்கும். நிம்மதியாக வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்தியவனை இப்படி பிரச்னையில் மாட்டி விட்ட "வாட்ஸ் ஆப்" பாவம் நம்மை சும்மா விடாது என்பதை நினைவில் கொள்ளவும்!

இப்படி செய்பவர்களுக்கு, ஒவ்வொரு Surveyக்கும் கமிஷன் கிடைக்கும். அதோடு இலவசமாக நமக்கு virus!

இதுதான் "WhatsApp Golden Version 4.0" வின் நிலை. யாரும் ஏமாந்துவிட வேண்டாம். வாட்ஸ் ஆப் என்ன அப்டேட் செய்தாலும், அது நமக்கு நம் playstoreல் மட்டுமே தகவலாக வரும். ஆகவே யாரும் நம்பி ஏமாற வேண்டாம். பத்து பத்து போட்டோவாகப் பொறுமையாக அனுப்புவது தவறில்லை. 100 போட்டோ அனுப்ப ஆசைப்பட்டு, மோசம் போய்விடாமல் இருத்தல் நன்று!

வாட்ஸாப் கோல்டன் வெர்ஷன்! - இது புது மோசடி


Tamilnadu Election 2016 Animation Part - 2 Massive Opinion Poll Results - கருத்து கணிப்பு


Udhayanidhi Reject to Karthik Subbaraj Movie









Polimer Tv Serial Inai Kodugal 17-05-16



Tamil Rhymes Collection | Nila Nila Odi Va And Many More Rhymes (Animated )






Vijay Tv Serial Kalyanam Mudhal Kadhal Varai 17-05-2016 Episode 386



SJ Surya Wants Shruti Hassan, Not Tamanna | Hot Tamil Cinema News




 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Kanchana 17-05-16 Raj Tv Serial Episodse 207


Mannipaaya - Tamil Short Film 2016 with subtitles



சமீபத்தில் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலாவி சென்னை மக்களை ஜில்லிட வைத்தது. ஆரம்பத்தில் அது டுபாக்கூர் நியூஸ் என்றுதான் பலர் நினைத்தனர். காரணம் செய்தி அப்படிப்பட்டது. 200 வருடங்களுக்கு முன் அதாவது சரியாக 1815-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி சென்னையின் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ்ஸாகவும் அப்படியே நான்கு நாட்கள் வரை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மைனஸ் மூன்று டிகிரி செல்சியஸ்ஸாகக் குறைந்து சென்னையே பனிக்காடாக உறைந்து போய்க் கிடந்தது என்ற செய்திதான் அது!

ஆச்சரியமாக இருக்கிறதா? கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தகவல் போல் இருந்தாலும் அது உண்மைதான். இந்தோனேஷியா தீவில் இருக்கும் தம்போரா மலையில் ஏற்பட்ட எரிமலைச் சீற்றத்தால் நிலப்பரப்பு 4300 மீட்டர் அளவுக்கு உயர்ந்ததாம். லாவா எனப்படும் நெருப்புக் குழம்பானது அதிக அளவில் 1815-ம் ஆண்டு ஏப்ரல் 10 மற்றும் 11-ம் தேதி வெளியேறியது. கிட்டத்தட்ட 12,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். 2,000 கிலோமீட்டருக்கு அப்பாலும் சீற்றம் உணரப்பட்டதாம். அதனால் ஏற்பட்ட தூசுத்துகள்களை ‘தம்போரா துகள்’ என அறிஞர்கள் அழைக்கிறார்கள். அது வடக்கு நோக்கி நகர்ந்து காலநிலையையும் தட்ப வெப்பத்தையும் மாற்றிவிட்டது. வியாபாரக்காற்று எனப்படும் கிழக்கிலிருந்து உருவான ஈரப்பதமானது இந்தியப் பெருங்கடலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிலமணி நேரங்களில் அதன் தாக்கம் வங்காள விரிகுடா வரை பரவியது. ‘ஏரோசால்’ எனப்படும் சாரல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் உருவாகி சென்னையைத் தாக்கியது. காற்றிலிருக்கும் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை வாய்ந்த அந்த ஏரோசால்களால்தான் சென்னை, வரலாறு காணாத குளிரில் மூழ்கியது. மைனஸ் குளிரில் எல்லாமே உறைந்தும் போனது. ஆரம்பத்தில் அந்தத் தட்பவெப்ப நிலையால் குஷியான மக்கள் அடுத்த சில நாட்களில் கதறி அழ ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம். ஒரு வருடத்திற்கு மழைப்பொழிவு இல்லாமல் போனதும் பயிர்கள் விளையவில்லை என்பதும் அதன் தாக்கமாம். இதனால் பஞ்சம் தலைவிரித்தாடியது. காலரா பரவியது. 70,000 பேர் பாதிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

ஆகஸ்ட் 1815-ல் ஜாவா தீவில் இருந்து கப்பலில் வந்து ஆய்வு செய்து திரும்பியதாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ‘தி மெட்ராஸ் கொரியர்’ என்ற பத்திரிகை செய்திக்குறிப்பில் இருக்கிறதாம்.

‘200 வருஷத்துக்கு முன்னாடி இப்படினா அடுத்த 200 வருஷத்துக்கு அப்புறம் சென்னை இருக்குமா?’ என்ற கேள்வியை இணையவாசிகள் உருவாக்கி பீதியைக் கிளப்புகிறார்கள்.

எது எப்படியோ சென்னையில் ஒரு கடும் பனிக்காலம் நிகழ்ந்ததை இந்தக் கொடும் வெயில்காலத்தில் நினைக்கும்போது ஜில்லென்று இருக்கிறது!

சென்னையில் ஒரு பனிக்காலம்!



SJ Surya Wants Shruti Hassan, Not Tamanna | Hot Tamil Cinema News


Dhanush Accepts What Udhayanidhi Rejected | Hot Tamil Cinema News




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Poovizhi Vasalile 16-05-16 Raj Tv Serial Episode 248






PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Poovizhi Vasalile 17-05-16 Raj Tv Serial Episode 249




Urave Uyire 17-05-16 Polimer Tv Serial Episode 272


Reason Behind Bobby Simha's Angry | PopcornReel


Celebs Spotted At Preity Zinta's Wedding Reception!








Saravanan Meenatchi is about Shakthi Saravanan who comes to India in search of a bride, just like his mother. Follow the turns his life takes when he falls in love with Thanga Meenatchi in this drama serial.Family | Star Vijay | Global Villagers

Saravanan Meenakshi Vijay Tv Serial 17-05-16 Episode 1576



கர்மவினைகள்... கற்பனையா?
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
? ஏற்றங்கள் மிகும்போது 'எல்லாம் எனது சாதுர்யத்தால் விளைந்தது’ என்று மார்தட்டிக்கொள்வதும், தோல்விகளைச் சந்திக்கும்போது, 'எல்லாம் என் தலையெழுத்து! விதியை மாற்றமுடியுமா?’ என்று விதியின்மீது பாரத்தைச் சுமத்தி அங்கலாய்ப்பதும் வழக்கமாகிவிட்டது.

நீங்கள் சொல்லுங்கள்... ஒருவரது இன்ப- துன்பங்களுக்கும், வெற்றி- தோல்விகளுக்கும் கர்மவினைகள்தான் காரணமா? அல்லது, கர்ம வினைகள் என்பதெல்லாம் வெறும் கற்பனையா?

- தி.காசிவிஸ்வநாதன், தூத்துக்குடி

முதல் கோணம்:

கர்மவினை, அதிர்ஷ்டம், தெய்வம், தலையெழுத்து, விதி, பிராப்தம், கொடுத்து வைத்தவன், பாவம் பண்ணியவன், புண்ணி யம் செய்தவன், பூர்வ புண்ணியம், கிரகக் கோளாறு ஆகிய அத்தனையும் முற்பிறவி களில் சேமித்த செயல்பாட்டைச் சுட்டிக் காட்டுகின்றன. அதை 'கர்ம சித்தாந்தம்’ என்கிறது சாஸ்திரம்.

'மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு, மீண்டும் கருவறையில் தோன்றுதல்... இப்படி பிறப்பு- இறப்பு எனும் சுழற்சியில் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்’ என்கிறார் ஆதிசங்கரர் (புனரபி ஜனனம், புனரபி மரணம், புனரபிஜனனீஜடரே சயனம்). அந்தப் பிறப்புக்குக் காரணம் கர்மவினை என்றும் கூறுகிறார். முற்பிறவியில் செய்த செயல்பாடுகளை, அதாவது இன்பம், துன்பம் இரண்டையும் உணர திரும்பவும் ஒரு பிறவி தேவைப்படுகிறது. ஆகையால், சேமித்த செயல்பாட்டை அனுபவிக்க பிறவி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 'ஆடைகள் கிழிந்து அல்லது நைந்துபோனால் அதைக் களைந்து புது ஆடைகளை ஏற்போம். ஆடை போன்ற உடல் தளர்ந்துபோனால், அதாவது உடலானது செயல்படும் தகுதியை இழந்துவிட்டால், அதைத் துறந்துவிட்டுப் புது உடலை ஏற்கவேண்டியது வரும்’ என்று கண்ணன் சொல்வான் (வாசாம்சி ஜீர்ணானியதாவிஹாய:....).

இப்படி, முற்பிறவி கர்மவினையானது மீண்டும் ஓர் உடலெடுக்கக் காரணம் ஆகாமல் இருக்கவேண்டும் எனில், கர்மவினையை உருத் தெரியாமல் கரைத்துவிடவேண்டும். அப்போது அதை அனுபவிக்க இடமில்லாததால், மறுபிறவி தேவையற்றுப் போகும். கர்ம வினையைக் கரைக்க 'தவம்’ ஒன்றே கைகொடுக்கும். நாம் செய்த கர்ம வினையை நாமே செயல்பட்டுத் தவமிருந்து கரைக்கவேண்டும்.

? 'கடவுள் துணையிருக்க, விதி என்ன செய்துவிடும்?’ என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களே?

பாவத்தைக் கரைக்க கடவுள் உதவ மாட்டார். அவருக்கு அதில் பொறுப்பு இல்லை. கடவுள் தன்னிச்சையாகச் செயல்பட மாட்டார். அவரவர் கர்மவினைக்குக் கட்டுப்பட்டு, அதற்கேற்ப உதவியளிப்பார். ஆகவே, 'கடவுளைச் சரணடைந்துவிடு! அவர் எல்லா கர்மவினைகளையும் அழித்துவிடுவார்’ என்பது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று.

ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன், கருணைக் கடல் கடவுள்; தான் படைத்த உயிரினங்களைத் துயரத்தில் ஆழ்த்த அவர் விரும்பமாட்டார்; தவம் செய்யாமலும், கர்மவினையைக் கரைக்க முயற்சிக்காமல் இருந்தாலும்கூட, கருணைக்கடலான கடவுள் தாமாகவே முன்வந்து நம் பாவங்களைக் கரைத்துக் கரையேற்றிவிடுவார் எனும் வாதம், நடைமுறைக்குப் பயனளிக்காது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 'நீ துயரத்தை ஏற்கும் செயலில் தன்னிச்சையாக ஈடுபடுவாய். ஆனால், உன்னைத் துயரம் தொடாமல் காப்பாற்ற, தன்னிச்சையாகக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர் கடவுள்’ என்ற எண்ணம், அறியாமையின் அடையாளம். அவர் அப்படிச் செயல்படுவது உண்மையாக இருந்தால், எந்த உயிரினமும் துயரத்தைச் சந்திக்க வேண்டியது இருக்காது. பெரும்பாலான உயிரினங்கள் துயரத்தை ஏற்று வாடுகின்றன.

சொற்பொழிவில் உதிரும் விளக்கங்கள் எல்லாம், அதைச் செய்பவருக்கு வேலை வாய்ப்பை ஈட்டித் தரும்; கேட்பவரின் துயரத்தை அது துடைக்காது. கேட்டால் மட்டுமே பாவம் தொலையாது. செயல்பட்டுத் தவமிருந்து கரைத்தால் மட்டுமே பாவம் தொலையும். 'உனது செயல்பாட்டில் நீ சேமித்த கர்மவினையை, உனது முயற்சியில் நீதான் அழிக்க வேண்டும்’ என்பது நியதி. இந்த நியதிக்கு மாறான விளக்கங்கள் மனத்துக்குப் பிடித்தமாக இருந்தாலும், விரும்பிய பலன் அவற்றில் இருக்காது.

? எனில், கர்ம வினைகளை அனுபவித்துதான் கரைக்க வேண்டுமா?

ஆமாம்! 'அனுபவிக்காமல் கர்ம வினை கரையாது’ என்கிறது சாஸ்திரம் (நாபுக்தம் க்ஷீயதெ கர்ம கல்ப கோடி சதைரபி). 'தவறான செயலில் ஈடுபட மனம் காரணமானது. தவறு செய்த மனம் தண்டனையை ஏற்கவேண்டும். தவற்றை நினைத்து நினைத்து மனம் நொந்து நொந்து பாவம் கரையவேண்டும்’ என்று சாஸ்திரம் விளக்குகிறது (பச்சாத்தாபம் ப்ராயச்சித்தம்).

'மனத்துடன் இணைந்து ஆன்ம வடிவில் கடவுள் இருக்கிறார். நீ தவறு இழைக்கும்போது, அவர் உன்னைத் தடுக்கவில்லை. நீ கொடை வள்ளலாகச் செயல்படும்போதும் அவர் உன்னைத் தடுக்கவில்லை. அவர் உன்னைத் தூண்டவும் மாட்டார்; தடுக்கவும் மாட்டார். சாட்சியாக எச்சரிக்கையுடன் இருப்பார். அவர் கண்காணிப்பாளர். சிந்தனையைத் திருப்பிவிடமாட்டார். கர்மவினை சிந்தனையைத் தூண்டிவிடும். கர்மவினை தனது விருப்பத்துக்கு உகந்த சிந்தனையை உருவாக்கும். ஆராய்ச்சிகள், கர்மவினையின் கோணத்தில் செயல்படும்’ என்றும் சாஸ்திரம் விளக்கும் (புத்தி: கர்மானுஸாரிணீ). ஆக, ஒருவனை அழிக்கவோ, ஆக்கம் கொடுத்து வாழ்த்தவோ இன்னொருவரால் இயலாது. அவனது கர்மவினையானது, அழிவைச் சந்திக்க அல்லது ஆக்கத்தை ஏற்கத் தயாராக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் (ஸகர்ம ஸ¨த்ரக்ரதிதோஹிலோக:).

இரண்டாவது கோணம்:

இல்லாத கர்மவினையைக் கற்பனை செய்துகொண்டு, அதற்குப் பெருமை அளித்து, அதை அளிக்கும் முயற்சிகளை எடுத்துக்கூறும் தங்களின் வாதமானது, கனவை நனவாக எண்ணி மகிழும் பாமரர் களை வேண்டுமானால் ஈர்க்கலாம். சிந்தனையாளர்களைச் சீண்டாது. பஞ்சபூதக் கலவையில் உருவான உடலில், சைதன்யத்தின் இணைப்பு காரணமாக மனிதன் உருவாகிறான். சைதன்யம் விடுபட்டதும் உடல் செயலிழந்துவிடும். இதையே பிறப்பு- இறப்பு என்கிறோம். உடலும் உள்ளமும் அழியும்போது, ஒருவனது கர்மவினையும் அழிந்துவிடும். பிறப்பு- இறப்பு இத்துடன் அவன் வாழ்க்கை முடிந்துவிடும். அடுத்த புதுப்பிறவியில் கர்மவினையின் தொடர்பு என்பது, நமது அழகான கற்பனையே!

? அப்படியென்றால், வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளுக் கும், எதிர்பாராத துயரங்களுக்கும் என்ன காரணம்?

மரத்தில் உருப்பெற்ற மாம்பழம் அடுத்த மரத்தின் உற்பத்திக்குக் காரணமாகும். அதை மரமாக வளரச்செய்ய, சுற்றுச்சூழல் காரணம் ஆகிறது. இறந்தபிறகு கர்மவினையின் தொடர்புக்குச் சான்று இல்லை. துயரத்தைச் சந்திக்கும்போது, அதற்கான காரணத்தை ஆராய்ந்து விடைதெரியாமல் விழிபிதுங்கிய வர்கள், கண்ணுக்குப் புலப்படாத- சான்றில்லாத கர்மவினையைக் காரணம் காட்டி ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, நிம்மதியானார்கள்.

ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கும் மனமானது, ஒரு செயலில் ஈடுபடும்போது தோல்வியையும் சந்திக்கும்; வெற்றியையும் சந்திக்கும். அதற்குக் காரணம் மனத்தின் தவறான கணிப்பே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக இருக்கும்போது, இல்லாத கர்மவினையை ஏன் தொடர்பு படுத்தவேண்டும்?

விட்டில்பூச்சி ஒளிப்பிழம்பில் இணைந்து மடிகிறது. மீன் உணவைத் தேடி கிணியில் (தூண்டிலில்) மாட்டிக்கொண்டு மடிகிறது. பாட்டால் ஈர்க்கப் பட்ட மான், வேடனிடம் சிக்கிக்கொள்கிறது. தேன் பருகும் வண்டானது, சூழலை மறந்து தேன் பருகும் வேளையில் பூ மூடிக்கொள்ள, உள்ளே மாட்டிக் கொண்டு மடிகிறது. பறவைகள் வேடன் வலையில் அகப்பட்டு இழப்பைச் சந்திக்கின்றன. கூண்டில் அகப்பட்ட கிளி சுதந்திரத்தை இழக்கும்.சிங்கமும் புலியும் மனிதனுக்கு அடிமையாகி வீரத்தை இழந்து தவிக்கின்றன. இதற்கெல்லாம் அந்தப் பிராணிகளின் அறியாமையே காரணம் என்று தெரிந்துகொள்கிறோம். அதுபோல் மனிதனும் தனது அறியாமையால் சங்கடத்தைச் சந்திக்கிறான், விவேகத்தால் மகிழ்ச்சியை ஏற்கிறான் என்பது நன்றாக விளங்கும்போது, கர்மவினை என்ற ஒரு புதுக் காரணத்தை ஒட்ட வேண்டிய அவலம் முளைக்கவில்லை.

? நவீன விஞ்ஞானமும் 'ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு’ என்றுதானே சொல்கிறது. இதையே நாங்கள் முன்வினை, கர்மவினை என்கிறோம். உங்கள் கருத்துப்படி இந்த வாதமும் தவறு என்று எடுத்துக்கொள்வதா?

சைதன்யம் (உயிர்) வெளியேறிய பிறகு உடலும் உள்ளமும் செயலிழந்துவிடும். அவை இரண்டும் ஜடம்; தனியே இயங்கும் தகுதி இல்லை. உடல் பஞ்ச பூதங்களில் லயித்துவிடும். உள்ளமும் அதோடு மறைந்துவிடும். இந்த நிலையில் உடல்- உள்ளம் இந்த இரண்டாலும் உருவான செயல்பாடு மட்டும் எப்படி மறையாமல் இருக்கும்? அதுவும் மறைந்து போகும். அப்படி மறைந்த கர்மவினையானது, அடுத்த பிறவியில் எப்படித் தொடரும்?

பகுத்தறிவுக்குப் பொருந்தாத வாதம் எல்லோரா லும் ஏற்கப்படும் தகுதியைப் பெறாது. முறுக்குப் பணியாரத்தை ஒரு குச்சியில் கோர்த்து, கடையில் வியாபாரத்துக்காகத் தொங்க விட்டிருப்பார்கள். ஒரு நாள், வேலையாள் ஓடி வந்து, ''ஐயா! கடையில் தொங்கவிட்டிருந்த முறுக்குக் குச்சியை எலி கொண்டு போய்விட்டது. என்ன செய்வது?'' என்று எஜமானனிடம் கேட்டான்.

''குச்சி போனால் போகிறது. நீ முறுக்கை எடுத்து வா!'' என்றான் எஜமானன். குச்சியை எலி இழுத்துச் சென்றால், முறுக்கும் அதோடு சேர்ந்து போயிருக்கும்தானே? முறுக்கை மட்டும் எப்படிக் கொண்டு வர முடியும்?

அதுபோல் உடல்- உள்ளம் ஆகிய இரண்டில் ஒட்டிக்கொண்டிருப்பது கர்மவினை. உடலும் உள்ளமும் அழிந்த பிறகு, கர்மவினை மட்டும் எப்படி மிச்சம் இருக்கும்? சிந்தியுங்கள். கர்மவினை ஒரு விளையாட்டு என்று புலனாகும். பிறக்காத குழந்தைக்குப் பெயர் சூட்டுவதுபோல், இறந்த கர்மவினையை சிரஞ்ஜீவியாக்குவது அறியாமை.

மூன்றாவதாக ஒரு கோணம்...

உதாரணத்தைக் காட்டி, தத்துவ விளக்கத்தைக் கொச்சைப்படுத்துவது பெருமை அல்ல. உதாரணத்தை ஊன்றிக் கவனித்த மனமே, உதாரண வடிவில் தத்துவத்தை வரையறுக்கும். தத்துவத்துக்கு உகந்த உதாரணமா என்பதை ஆராயாமல், அந்த விளக்கத்தில் மயங்கி, தவறான உதாரணத்தின் மூலம் தத்துவத்தின் தரத்தை விபரீதமாக ஏற்றுக்கொண்டுவிடும்.

இப்படியான அறியாமைதான், விழித்துக் கொண்டிருக்கும் மக்களையும் விபரீத முடிவை ஏற்கவைக்கிறது. தகுதி இழந்தவர்களைத் தூக்கிவிட இயலாத நிலையில், தோல்வியைச் சந்தித்தாலும், குறையை வேறோர் இடத்தில் சுமத்தும் அறியாமை இன்றும் விலைபோகிறது.

கண் சிமிட்டுதல், மூச்சு விடுதல், கை-கால்களை அசைத்தல், சிறுநீர், பெருநீர்வெளியேறுதல் ஆகியன, எந்த முயற்சியுமின்றி அனிச்சையாகவே நிறைவேறி விடும். குழந்தை பிறந்ததும் அதற்குத் தாயின் பாலைச் சுவைக்கும் திறமையை யார் கற்றுத் தந்தார்கள்? எல்லாவற்றுக்கும் பூர்வஜன்ம வாசனையே (கர்ம வினை) காரணமாகிறது.

? மனித சிந்தனைகளுக்கும் கர்மவினைதான் காரணமா?

ஆமாம்! மனத்தில் தோன்றிய எண்ணம், மூளையின் ஆணையால் தானாகவே செயல் பட்டு விடும். அந்த ஆணையை, நாம் நமது முயற்சியால் எதிர்க்கவும் முடியும்; ஏற்கவும் முடியும். இந்த இரண்டையும் தவிர்த்தால், ஆணையானது தாமாகவே செயல்பட்டு சுகதுக்கங் களைச் சந்திக்கவைக்கும். நமது சிந்தனையைக் கண்டு கொள்ளாமல், மூளை தன்னிச்சையாகக் கட்டளையிடும் தகுதி எங்கிருந்து வந்தது? இங்குதான் கர்மவினை சுதந்திரமாகச் செயல்பட்டு, தனது பங்கை நிறைவேற்றிக்கொள்கிறது.

? விதிப்படிதான் வாழ்க்கை என்றால் மதியை உபயோகிக்கும் வேலையே இல்லையே?!

அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது! இரண்டு விதமான செயல்பாடுகள். ஒன்று, கர்மவினையின் தூண்டுதலில் உருவானது. மற்றொன்று, நமது அறிவாற்றலில் எழுந்தது. அறிவாற்றல் செயல்படாத நிலையில் நிகழும் விளைவுகளுக்குக் கர்மவினையே காரணம் என்பதை மறுக்க இயலாது. நமது கட்டுப்பாட்டுக்கு உட்படாத மூளையின் ஆணைகள் நம்மையும் மீறி சுதந்திரமாகச் செயல்பட்டுவிடும். அந்த ஆணைகள் கர்மவினையின் தூண்டுதலில் உருவானவை. அறிவாற்றலால் அதை எதிர்த்துப் போராடுவதற்கும், தோல்வியைச் சந்திப்பதற்கும் கர்மவினையின் வலுவே காரணம் என்பதைச் சிந்தனையாளர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

எந்தத் தகுதியும் இல்லாதவன் வாழ்வில் வளம் பெற்று மகிழ்கிறான். மந்திரிப்பதவியில் அமர்த்தப்பட்டு, கௌரவப்படுத்தப்படுகிறான். அறிவாளிகள் குடத்தில் வைத்த விளக்குபோல் ஒடுங்கி வாழ்கிறார்கள். தவறான வழியில் தன்னையும் சமுதாயத்தையும் மாசுபடுத்திக் கொள்பவர்களும் உண்டு. சட்ட திட்டத்துக்கு உட்படாமல், சுயநலத்தை நிறைவுசெய்து, பெருமைப் படுபவர்களும் உண்டு. தவற்றில் மாட்டிக் கொள்ளாமல், பெரிய மனிதனாக நடமாடுபவர்களும் உண்டு.

இன்றையச் சூழலில் தவறு செய்தவன் தப்பிவிடுவதும், செய்யாதவன் மாட்டிக் கொள்ளுவதும் உண்டு. காட்டில் விலங்கினங் களுடன் இணைந்து வாழ்கிறான். நாட்டில் பாம்பு தீண்டி மடிகிறான். இங்கெல்லாம் வெற்றி- தோல்விகளுக்கு எதைக் காரணம் காட்ட இயலும்? அவரவர் தத்தமது கர்மவினைக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். கர்மவினையின் மாறுபாடு சுக- துக்கங்களுக்கு வழிவகுத்தது.

? எல்லாம் சரி! வாழ்க்கைச் சுழற்சி முற்றுப்பெற்ற பிறகும் வினைகள் தொடரும் என்பதை ஏற்கமுடியவில்லையே?!

பகலில் இருக்கும் வெப்பம், ஆதவன் மறைந்த பிறகும் அனுபவத்துக்கு வரும். பனிப் பொழுதின் தாக்கம், ஆதவன் தென்பட்ட பிறகும் தொடர்வது உண்டு. மழை விட்டாலும் தூவானம் தொடரும். பெருங்காயம் காலியானாலும், சொப்பில் அதன் வாசனை தொடரும்.வெந்நீர் கொதித்த பிறகு, அடுப்பு அணைந்தாலும், வெப்பம் நீரில் தொடரும். காரணம் மறைந்தாலும், அதன் விளைவு மறையாது.

உடலிலிருந்து வெளியேறிய ஜீவாத்மா மற்றுமொரு உடலில் நுழையும்போது, கர்மவினை யோடு இணைந்து நுழையும். விடுபட்ட ஜீவாத்மாவோடு அவன் ஆற்றிய அறமும் பின்தொடர்ந்து செல்லும் என்று சொல்லுவார்கள் (தர்ம:ஸகாபரமஹோபர லோகயானே). எல்லா வற்றையும் துறந்து செல்லும் ஜீவாத்மாவை, அவன் செய்த அறம் (கர்மவினை) பின்தொடரும் என்கிறது சாஸ்திரம் (தர்மஸ்தமனுகச்சதி). ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் மந்தையில் கன்று தனது தாயை அடையாளம் கண்டு இணைவது போல், ஜீவாத்மாவை அடையாளம் கண்டு அவனது கர்மவினை இணைந்துவிடும்.

கர்ம சித்தாந்தத்தின் அடித்தளத்தில் உருவான சாஸ்திரங்கள் ஏராளம். கர்மவினையின் விளையாட்டை எடுத்துரைக்க வந்தது ஜோதிடம். கர்மவினை கரைந்தால் மட்டுமே மோட்சம் உண்டு என்கிறது ஆன்மிகம். கர்மவினை பிணியாக மாறி துன்பத்தை விளைவிக்கிறது என்கிறது கர்மவிபாகம். ஒரு தாய்க்குப் பிறந்த பிள்ளைகளில் நால்வரில் ஒருவன் அறிவாளி, மற்றொருவன் முட்டாள், வேறொருவன் திருடன், மற்றுமொருவன் சோம்பேறி - இப்படி ஏற்பட, கர்மவினையே காரணமாகிறது. வாழ்க்கை வளமாகவும் வளம் குன்றியும் தென்பட கர்மவினைக்குப் பங்கு உண்டு.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மனிதர்கள் ஓர் இனம். ஆனால், ஒவ்வொருவரது இயல்பும் மாறுபட்டுக் காணப்படுகிறது. சிந்தனை மாற்றம் தெரிகிறது. இதில் ஏழை, பணக்காரர்கள், பண்டிதன், பாமரன் - இப்படிப் பல மாற்றங்கள் தென்படுவது ஏன்?

ஏழையைப் பணக்காரனாக்கவும், பாமரனைப் பண்டிதனாக்கவும் அளவுகடந்த முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனாலும், அதில் வெற்றி பெற இயலவில்லை. கல்விக் கூடங்கள் பல வழிகளில் செயல்பட்டும் கல்வி அற்றவர்கள் ஏன் தென்படுகிறார்கள்? பொருளாதார வளர்ச்சியில், ஏழ்மையை அகற்றப் பல வழிகளில் செயல்பட்டும் தோல்வியைச் சந்திப்பது ஏன்? ஏழைகள் எண்ணிக்கையில் பெருகி வருகிறார்களே! கர்மவினையை எதிர்த்துப் போராடினாலும், அதனை வீழ்த்த, செயலிழக்கச் செய்ய நம்மால் இயலவில்லை. பிரளயம் வரும்வரை ஏழையும் இருப்பான், பணக்காரனும் இருப்பான். ஒடுக்கப் பட்டவனும் இருப்பான், ஒடுக்குபவனும் இருப்பான். அவர்களது கர்மவினையை நம்மால் மாற்ற இயலாது. நாடகம் ஆடுகிறோம்.

கர்மவினைகள்... கற்பனையா?





En Kanmani 17-05-2016 Polimer Tv Serial Episode 164





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Show Kitchen Galatta 17-05-16



 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING


Mann Vasanai 17-05-16 Raj Tv Serial Episode - 1248




Deivam Thandha Veedu Vijay Tv Serial 17-05-16 Episode 713



சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

சென்னைக்கு அருகே 240 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,

" தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது சென்னைக்கு அருகே 240 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மையம் கொண்டுள்ளது. இதனால் வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யும். அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இதனால் மீனவர்கள் 48 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம். தரைக்காற்று வேகமாக வீசும். அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 14 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் கன மழை நீடிக்கும்:வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!



"I am the One You're Looking For"- Pencil Director Hilarious Interview



Uma & Riyaz Proud Moments abour their Son | Pencil Press meet






Jaya Tv Serial Jai Veera Hanuman 17-05-16



இந்த தேர்தல் பரபரப்பையும் தாண்டி ஒரு ஃபேஸ்புக் தகவல் நம்மை ஆச்சர்யப்படுத்தி, சிந்திக்க வைத்தது.

சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் போகும்போதும் வரும்போதும் முன்னால் சென்ற வாகனத்தை இடித்து, ஏதாவது உடைந்துவிட்டால் ஒரு ‘ஸாரி’ சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவோம். பாதிக்கப்பட்டவரும் , ‘இந்த நெரிசலில் ஏன் வம்பு’ என கடந்துபோய்விடுவார். இல்லையேல் இருதரப்பும் வாக்குவாதத்தில் இறங்கினால் கூட்டம் கூடி, போலீஸில் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்குக்கூட போய்விடுவது உண்டு. இது, சென்னைவாசிகள் அன்றாடம் சந்திக்கும் காட்சி. சமயத்தில் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, போய் திரும்பிவந்து பார்க்கும்போது கண்ணாடி, லைட்டுகள், இண்டிகேட்டர்கள் உடைந்து இருப்பதை பார்த்திருப்போம். ‘எவன்டா இப்படி உடைச்சி வெச்சிருக்கான். அவன் மட்டும் என் கையில கிடைச்சான்...’ என்று கொலைவெறி கொள்வோம்.

அப்படி ஒரு வாகன ஓட்டியை கொலைவெறி நிலைக்கு கொண்டுபோன ஓர் உடைப்பு ஆசாமி, பிறகு தான்செய்த செயலால் அந்த வண்டி உரிமையாளரை நெகிழச் செய்து இருக்கிறார். மனிதமும் நேர்மையும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அந்த சம்பவம்.

கடந்த 14 ம் தேதி இரவு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே, மார்க் நைட் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்தால், வண்டியின் பின்புறம் விளக்கு உடைந்து காணப்பட்டுள்ளது. ‘எவனோ உடைச்சுட்டு ஓடிட்டான்...’ என்று மார்க் மனசுக்குள் திட்டிக் கொண்டிருக்கும்போதே, வண்டியில் மாட்டிவைத்திருந்த அவரின் ஹெல்மெட்டுக்குள் ஒரு சிறிய வெள்ளை பேப்பர் சுருட்டி வைக்கப்பட்டு இருந்ததை கவனித்தார். அதனை பிரித்து பார்த்தால், உள்ளே 200 ருபாய் பணம். அத்துடன் வண்டியின் பின்புற லைட்டை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்டு சில வாசகங்கள். பணத்தையும் கடிதத்தையும் பார்த்த மார்க்குக்கு நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. இந்த காலத்திலும் இப்படி மனிதர்க்ள் இருக்கிறார்களா? என்று அதனை படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில் மார்க், "சாலையில் அவசரமும் பொறுப்பற்றத்தன்மையுடன் நடந்துகொள்பவர்களுக்கு மத்தியில் மனிதத்தை வலியுறுத்தும்வகையில், அந்த நண்பர் இந்த காரியத்தை செய்திருக்கிறார். இன்னமும் எனக்கு அந்த நபர் வியப்பை அளிக்கிறார். நண்பர்களே இந்த விஷயத்தை தயவு செய்து ஷேர் செய்யவும். எனது நன்றி அந்த மனிதருக்கு சென்று சேர வேண்டும். இந்த விஷயத்தை யார் செய்தாலும் அவர் ஒரு நல்லமனிதர்" என்று பதிவிட்டுள்ளார். இது ஃபேஸ்புக்கை கலக்கி வருகிறது.

யார் சொன்னா சென்னை மனிதம் இல்லாத ஊருனு?

அட... சென்னைல இப்படியும் நடக்குமா..?



71.3 % polling registered at Madurai : reporter update | News7 Tamil








Polimer Tv Serial En Valkai En Payanam 17-05-15


தேர்தல் 2016: வாக்களிக்க தவறிய பிரபலங்கள்



Twinkle Twinkle Little Star | Baby Trinayana | DAV Girls School | Penn Drive | Bosskey TV





 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING


Mann Vasanai 16-05-16 Raj Tv Serial Episode - 1247






PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING


Sindhu Bhairavi 17-05-16 Raj Tv Serial Episode 1537





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vellithirai 17-05-16 Raj Tv Show