* நம் உடலில், 'ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கிவி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் என்று அழைக்கப்படும் வைட்டமின்களான ஏ, சி, ஈ சத்துக்கள் உள்ளதால், ஃப்ரீ ராடிக்கல்ஸை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
* ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே இதிலும் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், முதுமைக் கால கண் நோய்கள், தோல் நோய்களைப் போக்கும்.
* தினமும் ஒரு கிவிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தாலே, அன்றைய தினத்துக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட பெரிதும் அவசியம். ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு நீங்கி, சுவாசம் சீரடையும்.
* இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, சருமம் இளமைப் பொலிவுடன் இருக்கவும் கருவுறுதலுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
* ஃபோலிக் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதில் நிறைவாக இருப்பதால், குழந்தைகளின் மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
* வாழைப் பழத்தில் உள்ளதைவிட, பொட்டாசியம் தாது உப்பு அதிக அளவில் உள்ளது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பாலிபீனால்கள் இதய தசை மற்றும் ரத்தக் குழாய்களைப் பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.
* நார்ச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைத் தீர்க்கும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை நீக்கும்.
* சர்க்கரைக் குறியீடு இதில் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை, கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.