தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஹாலிவுட் வாரியர்
டாம் ஹார்டி நடிப்பில் ஹாலிவுட்டில் வெளிவந்த படம், வாரியர். அண்ணன், தம்பி சந்தர்ப்ப சூழ்நிலையால் குத்துச் சண்டைப் போட்டியில் மோத வேண்டி வருகிறது. இருவருக்கும் குரு, அவர்களின் தந்தை.
ஆக்ஷனும், சென்டிமெண்டும் கலந்துகட்டிய இந்தப் படத்தை இந்தியில் பிரதர்ஸ் என்ற பெயரில் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். அக்ஷய் குமார், சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளனர். இவர்களின் தந்தையாக ஜாக்கி ஷெராப் வருகிறார். ஆகஸ்ட் 14 படம் வெளியாகிறது.
படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தமிழ், தெலுங்கிலும் வாரியரை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment