குறைந்த வயதில் உடல் உறுப்புகளை தானம் செய்த குழந்தை
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கரகுளம் ஏனிகரா நிலவூர்தட்டம் பகுதியை சேர்ந்தவர் அஜீத். இவரது மகள் அஞ்சனா (வயது 3). வீட்டில் விளையாடிபோது அஞ்சனா திடீர் என்று மயங்கி விழுந்தார்.
பின்னர் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமிக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் அஞ்சனாவின் கண்கள் மூலம் தற்போது 2 மாணவர்கள் பார்வை பெற்றுள்ளனர். 2 மாணவர்களும் இடது கண்ணில் பார்வை இழந்து தவித்தவர்கள். தற்போது அஞ்சனாவின் கண்கள் மூலம் இவர்கள் உலகை தெளிவாக காணும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 2 மாணவர்களுக்கும் திருவனந்தபுரம் அரசு கண் மருத்துவமனையில் இதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment