கிழவன், கருப்புதுரைதான் லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா?
வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா ஆகிய படங்களை இயக்கி நடிக்கிறார் லாரன்ஸ். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை இயக்கி நடிக்க 14 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளது.
காஞ்சனா 2 படம் வெளிவரும் முன்பே, அடுத்து, ஒரு டிக்கெட்ல ரெண்டு படம் என்ற படத்தை இயக்கி நடிப்பதாக லாரன்ஸ் அறிவித்திருந்தார். இந்தப் படத்தில் இடைவேளைக்குமுன் ஒரு கதையும், இடைவேளைக்குப் பிறகு ஒரு கதையும் இடம்பெறும். ஒரு கதைக்கு கிழவன் என்றும், இன்னொரு கதைக்கு கருப்புதுரை என்றும் பெயர் வைத்திருந்தார்.
வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் இரு படங்களை இயக்கி நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு, ஒரு டிக்கெட்ல ரெண்டு படம் குறித்து லாரன்ஸ் எதுவும் கூறவில்லை. அவர் இயக்குவதாக இருந்த இந்தப் படத்தின் இரு கதைகளையும் இணைத்துதான் மொட்ட சிவா கெட்ட சிவா கதையை உருவாக்கியிருக்கிறார் என்றும், இல்லை கருப்புகுதிரை கதையை கொஞ்சம் விரிவுப்படுத்தி மொட்ட சிவா கெட்ட சிவா கதையை எழுதியிருக்கிறார் எனவும் இருவேறு தகவல்கள் உலவுகின்றன.
மூன்றாவதாக, அந்தக் கதைகளுக்கும் இந்தப் படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள். உண்மை என்ன என்பதை லாரன்ஸே விளக்கினால்தான் உண்டு.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment