ஜீப்பை மையமாக வைத்து உருவாகும் அதர்வாவின் ருக்மணி வண்டி வருது

Share this :
No comments


சண்டி வீரன் பரவலான வரவேற்பையும், நல்ல பெயரையும் வாங்கித் தந்த மகிழ்ச்சியில் இருக்கிறார், அதர்வா, அவரது நடிப்பில் கணிதன், ஈட்டி என பல படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் ஒப்புக் கொண்ட இன்னொரு படத்தை ராஜாமோகன் இயக்குகிறார்.

கிராமத்தை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகிறது. உள்ளடங்கி இருக்கும் ஒரு கிராமத்துக்கு ஜீப்பை எப்படியும் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கான முயற்சிதான் கதை. அதனால் படத்துக்கு, ருக்மணி வண்டி வருது என பெயர் வைத்துள்ளனர். பண்ணையாரும் பத்மினியும் படத்தில் கார் பிரதானமாக இடம்பிடித்தது போல், இந்தப் படத்தில் ஜீப்.

இதில் தெலுங்கு நடிகை பூஜா நாயகியாக நடிக்கிறார்.

No comments :

Post a Comment