மைக்ரோமேக்ஸ் நிறுவனரை மணக்கும் நடிகை அசின்
மலையாள இயக்குனர் சத்தியன் அந்திக்காடின், ஜெயகாந்தன் மகன் நரேந்திரன் வகா படத்தில் அறிமுகமானவர் அசின். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி அசினை தமிழில் அறிமுகப்படுத்தியது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த நேரம் கஜினி படத்தின் மூலம் இந்திக்கு சென்றார். இந்தியில் பெரிய நடிகையாகும் ஆசையில் மும்பையிலேயே தங்கினார். முதலில் ஒன்றிரண்டு வாய்ப்புகள் கிடைத்தாலும் பிறகு படங்கள் கிடைப்பது குதிரை கொம்பானது. ஒருகட்டத்தில் படங்களே இல்லை என்ற நிலை.
அவர் நடித்த, ஆல் இஸ் வெல் படம் மட்டுமே தற்போது வெளியாக உள்ளது. அந்தப் படமும் வெளியானால், அசினின் சினிமா மார்க்கெட் நில் பேலன்ஸ்.
இந்நிலையில் அவர் தனது நீண்டநாள் காதலரை மணக்கப் போவதாக தகவல். அசினின் காதலர், மைக்ரோமேக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான, ராகுல் சர்மா. விரைவில் இவர்கள் திருமணம் நடக்கயிருக்கிறது.
திருமணம் காரணமாக புதிய படங்கள் எதிலும் அசின் கமிட்டாகவில்லை என கூறப்படுகிறது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment