தினமும் ஒரு ஆப்பிள், முட்டை சாப்பிடுவது, உணவில் இஞ்சி, பூண்டு சேர்த்துக் கொள்வதால் மட்டும் தான் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றில்லை. உங்களுக்கு பிடித்த நபரை தினமும் எட்டு நிமிடங்கள் கட்டியணைத்துக் கொண்டாலும் கூட நல்லது தான்.
ஆம், தசை வலி, மன அழுத்தம் குறைய, உறவில் இணக்கம், இன்பம் அதிகரிக்க, நச்சுக்களை போக்க என பல நன்மைகள் உடலில் ஏற்பட இந்த கட்டிப்பிடி வைத்தியம் பயனளிக்கிறது....
தசை வலி குறையும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், நாம் உடலுக்கு பெரிதாக எந்த வேலையும் தருவதில்லை. இதனால் தசைகளில் அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த அழுத்தத்தை குறைக்க வலிநிவாரண மாத்திரைகளை விட கட்டியணைத்துக் கொள்வது தான் சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
இரத்த அழுத்தம் குறையும் கட்டியணைத்துக் கொள்ளும் போது உடலில் எண்டோர்பின் மற்றும் மகிழ்ச்சி ஹார்மோனான ஆக்சிடாஸின் சுரக்கின்றன. இதனால் இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது.
வீக்கத்தை குறைக்கும் இரத்தத்தில் இருக்கும் அழற்சி குறிப்பான்கள் அதிகமாவதால் தான் இதய கோளாறுகள், நீரிழிவு, மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.
கட்டியனைத்துக் கொள்வது உடலில் இருக்கும் நச்சுக்களை போக்க ஊக்குவிக்கிறது, இதனால் உடல்கூறுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மன அழுத்தம் குறையும் உங்களுக்கு பிடித்தவர்களை தினமும் கட்டியணைத்துக் கொள்வதால் மன அழுத்தம் குறைகிறது, மேலும் அந்நாளில் சிறந்து வேலைகளில் ஈடுபடவும் இது உதவுகிறது.
உணர்வை மேம்படுத்தும் மற்றவரை புரிந்துக் கொள்ள கூடிய உணர்வு அதிகரிக்கவும் கட்டியணைத்துக் கொள்தல் உதவுகிறது என கூறப்படுகிறது.
இணைப்பை அதிகரிக்கும் மனம் மற்றும் உடலில் மாற்றத்தை கொண்டுவர உதவுகிறது இது. இதனால் உறவுகளுக்கு மத்தியில் இருக்கும் இணைப்பை அதிகரிக்க இது உதவுகிறது.
நம்பிக்கையை அதிகரிக்கும் உங்கள் துணையை தினமும் எட்டு நிமிடங்கள் கட்டியணைத்துக் கொள்வதால் நம்பகத்தன்மை அதிகரிக்கிறதாம். மேலும், ஒருவருக்கொருவர் தரும் மரியாதையும் அதிகரிக்கிறது. மேலும், இருவர் மத்தியில் நேர்மறை எண்ணங்கள் வளரவும் இது பயனளிக்கிறது.
வயாதாகும் தாக்கத்தை குறைக்கிறது மன அழுத்தம், இரத்த அழுத்தம் குறைவது, நச்சுக்களை போக்குவது, இணைப்பை அதிகரிப்பது போன்றவை எல்லாம் மொத்தமாக வயதாகும் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. இதனால் நீங்கள் மனதளவிலும், உடலளவிலும் இளமையாக உணர முடியும்
No comments :
Post a Comment