கணிதனால் கருணாகரனுக்கு கிடைத்த விக்ரம் படம்
விக்ரம் இரு வேடங்களில் நடித்துவரும், இரு முகன் படத்தில் முக்கியமான வேடத்தில் கருணாகரன் நடிக்க உள்ளார்.
அடுத்த மாதம் முதல் அவர் இரு முகன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இதுபற்றி குறிப்பிட்ட கருணாகரன், கணிதன் படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்த இரு முகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளார். கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளிலும் விக்ரமுடன் வரும் கதாபாத்திரம் எனக்கு என்றார்.
அடுத்த மாதம் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் கருணாகரன், மலேசியாவில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பிலும் கலந்து கொள்கிறார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment