டுவிட்டர் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

Share this :
No comments


அனைத்து தரப்பு மக்களையும் எளிதில் சென்றடையும் வகையில், டுவிட்டர் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில், டுவிட்டர் இந்தியா தலைமை அதிகாரி ரஹீல் குர்ஷீத் முன்னிலையில், டுவிட்டர் மூலம் தேர்தலில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும், தேர்தல் குறித்த அனைத்து தரப்பு தகவல்களும், தேர்தல் குறித்த வீடியோ காட்சிகளையும் டுவிட்டர் மூலம் மக்களுக்கு சென்றடைய ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும், தேர்தலில் வாக்காளர்ளை ஊக்கவிக்க பிரபல நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்களின் ஆட்டோ கிராப்பை போன்றவற்றை டுவிட்டர் மூலம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment