வெங்காய ரசம்
இதுவரை எத்தனையோ ரசம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வெங்காய ரசம் செய்து சுவைத்ததுண்டா? ஆம், வெங்காயத்தைப் பயன்படுத்தியும் ரசம் செய்யலாம். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் நீங்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
இங்கு வெங்காய ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 5 பற்கள் (தட்டியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
ரசப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெங்காயம், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு அதில் புளிச்சாறு, ரசப்பொடி, உப்பு, சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
ரசம் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், வெங்காய ரசம் ரெடி!!!
Labels:
recipes
No comments :
Post a Comment