வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி
சிலருக்கு வயிற்று பகுதியில் அதிகளவு சதை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
முதலில் சேரில் அமர்ந்து கொள்ள வேண்டும். கைகளை மேலே நேராக நீட்ட வேண்டும். உள்ளங்கையை எதிரே இருப்பவருக்குத் தெரிவது போல வைக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும்.
இப்போது, மெதுவாக, உடலை வளைத்து, கைகளைப் பாதத்துக்கு முன்பும், பிறகு பக்கவாட்டிலும் பதிக்க வேண்டும். பிறகு, கைகளை மடக்காமல் அப்படியே நிமிர்ந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதை ஆரம்பத்தில் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
அதிகளவு தொப்பை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பலனைத்தராது.
பலன்கள்
அடி வயிறு அழுத்தப்படுவதால், வயிறு வலுப்பெறும். மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். நரம்பு மண்டலத்தைச் சீராகச் செயல்படவைக்கும்.
Labels:
health
,
News
No comments :
Post a Comment