உங்களுக்கு கழுத்து வலி அதிகம் உள்ளதா? அது எப்படி வந்தது என்று தெரியவில்லையா? கழுத்து வலி வருவதற்கு உங்களது செயல்பாடுகள் தான் முக்கிய காரணம். அதில் சில உங்களை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் மிகவும் சிம்பிளாக இருக்கலாம்.
உங்களுக்கு அடிக்கடி கழுத்து வலிப்பதற்கான அந்த செயல்கள் என்னவென்று தெரிந்து கொண்டால், அச்செயல்களைத் தவிர்த்து கழுத்து வலி வருவதில் இருந்து விடுபடலாம். சரி, இப்போது உங்களுக்கு கழுத்து வலியை உண்டாக்கும் அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போம்.
அலுவலகத்தில் உட்காரும் நிலை நீங்கள் அலுவலகத்தில் உட்காரும் போது கழுத்தை தவறான நிலையில் நீண்ட நேரம் வைத்திருந்தால், அதன் காரணமாக கழுத்து வலி ஏற்படும்.
குறிப்பாக கம்ப்யூட்டரின் திரையை மிகவும் கீழே அல்லது உயரமாக இல்லாமல் சரியான நிலையில் வைத்துக் கொண்டு வேலை செய்யுங்கள். இதனால் கழுத்து வலியைத் தவிர்க்கலாம்.
போனிடைல்/குதிரைவால் மிகவும் இறுக்கமாக குதிரைவால் போடுவதன் மூலமும் கழுத்து வலி ஏற்படும். குதிரைவால் போடும் போது மிகவும் கடுமையாக முடியை இழுப்பதன் மூலம் ஸ்கால்ப்பில் உள்ள திசுக்கள் மற்றும் கழுத்து தசைகள் துன்புறுத்தப்பட்டு, தலைவலி, கழுத்து வலி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே இறுக்கமாக குதிரைவால் போடுவதைத் தவிர்த்திடுங்கள்.
தூங்கும் நிலை சிலருக்கு தூங்கி எழும் போது கழுத்து வலியை உணர்வார்கள். இதற்கு நீண்ட நேரம் தவறான நிலையில் படுத்ததால், கழுத்து தசைகள் பாதிக்கப்பட்டு, அதனால் கடுமையான வலியை உணர நேரிடுகிறது. முடிந்த அளவில் குப்புறப்படுத்துக் கொண்டு, தலையை திருப்பி படுப்பதைத் தவிர்த்து, நேராக படுக்க பழகுங்கள்.
அதிகப்படியான மன அழுத்தம் அதிகப்படியான மன அழுத்தமும் கழுத்து வலியை உண்டாக்கும். எப்படியெனில் மன அழுத்தம் அல்லது மிகுந்த டென்சனில் இருக்கும் போது, பலரும் தங்களது கழுத்து மற்றும் முதுகு தசைகளை இறுக்குவதால், கழுத்து வலி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகளைத் தூக்குவது சில பெற்றோர்கள் மிகுந்த குஷியில் இருக்கும் போது, தன் குழந்தைகளை தலைக்கு மேலே தூக்குவார்கள். ஆனால் இப்படி தலைக்கு மேலே தூக்குவதால், கழுத்து தசைகள் சிரமத்திற்கு உள்ளாகி, கழுத்து வலியை ஏற்படுத்தும்.
பளு தூக்குதல் ஜிம் செல்வோர் பலரும் பளு தூக்குவார்கள். இப்படி மிகுதியான பளுவைத் தூக்கும் போது, கழுத்து, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகள் அதிகமாக சிரமத்திற்கு உள்ளாகும் போது, கழுத்து வலியை சந்திக்கக்கூடும்.
No comments :
Post a Comment