ஏன் நாம ஜெயிச்சது உங்களுக்குப் பிடிக்கலையா?.. நிருபரிடம் எகிறிய டோணி
இந்தியா ஜெயித்தது உங்களுக்குப் பிடிக்கலையா என்று செய்தியாளரைப் பார்த்து கோபமாகக் கேட்டார் கேப்டன் டோணி. கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் டோணி இப்போதெல்லாம் அவ்வப்போது கோபப்படவும் செய்கிறார். தனது கோபத்தையம் அவர் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் நேற்று வங்கதேசத்திடம் சிக்கி தப்பிப் பிழைத்து வெற்றி பெற்ற இந்திய அணியின் ஆட்டம் ரசிகர்களுக்கு திரில்லர் படம் பார்த்த அனுபவத்தைக் கொடுத்து விட்டது.
செய்தியாளரிடம் கோபம் போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை டோணி சந்தித்தபோது நெட் ரன் ரேட் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபம் காட்டினார் டோணி.
ஒன் மினிட் நெட் ரன் ரேட் நமக்கு சாதகமாக இல்லையே என்று அந்த செய்தியாளர் கேட்டபோது, ஒன் மினிட். இந்தியா வென்றது உங்களுக்கு மகிழ்ச்சி தரவில்ல என்று நினைக்கிறேன். உங்களோட கேள்வி, வாய்ஸ் எல்லாவற்றையும் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது என்றார் டோணி கோபமாக.
யோசிச்சுப் பாருங்க தொடர்ந்து டோணி பேசுகையில், நாம் டாஸ் இழந்து விட்டோம். அந்த விக்கெட்டில் எப்படி பேட் செய்ய முடியும் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வெளில உட்கார்ந்து கொண்டு கதை விடக் கூடாது அந்த பிட்ச்சில் நம்மால் ஏன் அதிகம் ஸ்கோர் பண்ண முடியவில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வெளியில் உட்கார்ந்து கொண்டு இதைப் பற்றியெல்லாமல் யோசிக்காமல் இருந்தால் நீங்கள் கேள்வியே கேட்கக் கூடாது என்றார் டோணி.
ரன்ரேட்டும் அவசியம் டோணி சொல்வது போல இந்த வெற்றியால் இந்தியாவுக்கு சந்தோஷம்தான் என்றாலும் கூட, நெட் ரன் ரேட் நமக்குப் பாதமாகத்தான் உள்ளது. அடுத்து நாம் ஆஸ்திரேலியாவுடன் கடைசி லீக் போட்டியில் ஆடவுள்ளோம்.
ஜெயிக்காவிட்டால் கஷ்டம் அந்தப் போட்டியில் நாம் வென்றே ஆக வேண்டும். அப்படி வெல்லத் தவறினால் பெரும் சிக்கலாகி விடும். காரணம், நமக்கு சாதகமாக ரன் ரேட் இல்லை. நாம் மைனஸில் இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் அந்த செய்தியாளர் குறிப்பிட்டுக் கேட்டார்.. !
Labels:
News
,
sports
No comments :
Post a Comment