ஆசிரியர் கோதைக்கு சமூக வலைதளங்களில் குவியும் ஆதரவு

Share this :
No comments


ஒரு வருடத்திற்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவனுடன் ஓடிப்போன ஆசிரியர் கோதைலட்சுமி சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் கைது செய்யப்பட்டார். தற்போது அந்த ஆசிரியர் கோதைலட்சுமிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த வருடம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது ஆசிரியர் கோதைலட்சுமி, 10-ஆம் வகுப்பு மாணவன் காதல் விவகாரம். பல இடங்களில் தலைமறைவாகி வாழ்ந்து வந்த இவர்கள் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். தற்போது மாணவன் பெற்றோர்களுடன், அந்த ஆசிரியர் ஜெயிலிலும் உள்ளார்.

ஒரு வருடம் சேர்ந்து வாழ்ந்தார்கள் இவர்கள். ஆசிரியர் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்த மாணவன் தான் பெற்றோர்களுடன் செல்வதாக விருப்பம் தெரிவித்து பெற்றோருடன் சென்று விட்டான்.

மாணவன் மைனர் என்பதால் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவனால் கர்ப்பமாகிய ஆசிரியர் மேஜர் என்பதால் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு அவர் சிறையில் உள்ளார்.

தற்போது ஆசிரியர் கோதைலட்சுமி மாணவனால் கற்பமாகி உள்ளதால், இரண்டு வருடம் கழித்து மாணவனே ஆசிரியரை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என பலரும் சமூக வலைதளமான முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப்பில் குரல் கொடுத்து வருகின்றனர்.

No comments :

Post a Comment