மீண்டும் இணையும் சிம்புதேவன், வடிவேலு கூட்டணி

Share this :
No comments


ஷங்கரின் உதவி இயக்குனர் சிம்புதேவனின் முதல் படம், இம்சை அரசன் 23 -ம் புலிகேசி. வடிவேலு நாயகனாக நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிம்புதேவனுக்கும், வடிவேலுக்கும் இதுவே கடைசி வெற்றியாகவும் அமைந்தது.

அதன் பிறகு சிம்புதேவன் இயக்கிய எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. போலவே, வடிவேலு ஹீரோவாக நடித்த படங்களும்.

இந்நிலையில், இம்சை அரசனின் இரண்டாவது பாகத்தை எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஷங்கரே இந்தப் படத்தை தயாரிக்க வடிவேலு நடிக்கிறார். சிம்புதேவன் இரண்டாம் பாகத்தையும் இயக்குவார் என கூறப்படுகிறது.

விரைவில் இரண்டாம் பாகம் குறித்த செய்தியை எதிர்பார்க்கலாம்.

No comments :

Post a Comment