திமுகவிற்கு விஜயகாந்த் தேவையில்லை : துரைமுருகன் அதிரடி

Share this :
No comments


திமுகவிற்கு விஜயகாந்த் தேவையில்லை என்று திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் மதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன் “மதிமுகவிலிருந்து 400 பேர் திமுகவில் இணைவதற்காக வந்திருக்கிறீர்கள். இவ்வளவு பேர் அந்த கட்சியில் இருந்ததே பெரிய விஷயம்.

வேலூர் மாவட்டத்தில் 2வது பெரிய நகரம் திருப்பத்தூர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பதை யாரும் பார்க்காதீர்கள். கருணாநிதி, முக.ஸ்டாலின் ஆகியோர் அங்கு போட்டியிடுவதாக நினைத்து களப்பணி ஆற்றுங்கள்” என்று கூறினார்.

மேலும் அவர் பேசும் போது “ விஜயகாந்த் எங்களுக்கு தேவையில்லை. திமுக என்பது ஐஸ்கிரீம் போல. விஜயகாந்த் செர்ரி பழம் போல. ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் செர்ரி பழத்தை தூக்கி எறிந்து விடுவார்கள். ஐஸ்கிரீமைத்தான் சாப்பிடுவார்கள்” என்று பேசினார்.

திமுக கூட்டணியில் விஜயகாந்த் வருவார் என்றதும் “பழம் கனிந்து பாலில் விழும்” என்றார் கருணாநிதி. இப்போது தேமுதிக தனித்துப் போட்டி என்று கூறிவிட்டதால் விஜயகாந்தை ‘செர்ரி பழம்’ என்கிறார் துரைமுருகன்.

இப்படி மாற்றி பேசுவதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா....

No comments :

Post a Comment