கூட்டணிக்காக அவமானப்பட்ட கருணாநிதிக்காக வருத்தப்படுகிறேன் - வைகோ
ஒரு பெரிய கட்சி கூட்டணிக்காக இவ்வளவு அவமானப்பட்ட கலைஞருக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாநகர், புறநகர், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அதற்கு முன்பாக செய்தியாளர்களிடன் பேசிய வைகோ, ‘’சமீபத்தில் கலப்பு திருமணம் செய்த சங்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இன்னும் நாம் பழங்காலத்திற்கு செல்வதை உணர்த்துகிறது. ஏற்கனவே சங்கரை 2 முறை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் எதிரிகளை அழைத்து விசாரிக்கவில்லை. அப்படி விசாரித்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது.
விஜயகாந்த் திமுக கூட்டணியில் சேரப்போவதாக திமுக தரப்பில் தவறான தகவல் திணிக்கப்பட்டு வந்தது. தற்போது விஜயகாந்த் தனித்து போட்டி என்று அறிவிப்பின் மூலம் ஒரே கல்லில் அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கி விட்டது. கலைஞருக்காக நான் வருத்தப்படுகிறேன். ஒரு பெரிய கட்சி கூட்டணிக்காக இவ்வளவு அவமானப்பட்டுள்ளது.
திமுக தற்போது கலைஞர், ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. திமுகவிற்கு சம்பந்த மில்லாதவர்கள் கையில் கார்ப்பரேட் அமைப்பாக மாறியுள்ளது.
விஜயகாந்த்தும் எங்களது கூட்டணியில் கரம் கோர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தமாகாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்’’ என்று கூறினார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment