பாகுபலி நாயகன் ‘பிரபாஸ்’ சகோதரருக்கு ஓராண்டு சிறை
செக் மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் ’பாகுபலி’ கதாநாயகன் பிரபாஸின் சகோதரர் பிரபோத்துக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபாஸ்
செஹுந்தராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம், நடிகர் பிரபாஸின் சகோதரரான பிரபோத், ரூ. 43 லட்சத்துக்கு செக் கொடுத்துள்ளார். அந்த செக் வங்கியில் செலுத்தப்பட்டு, பிரபோத் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டது.
இதனையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், பிரபோத் மீது தொழிலதிபர் செக் மோசடி வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரபோத்துக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கியது. மேலும், அந்தத் தொழிலதிபருக்கு ரூ. 80 லட்சத்தை இன்னும் இரண்டு மாதங்களில் வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment