ஜெயலலிதாவின் ஆட்டம் ஆரம்பம்: விஜயகாந்தை விமர்சிக்க கட்சியினருக்கு தடை
தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் அவரது மனைவியும் அக்கட்சியின் மகளிர் அணி தலைவியுமான பிரேமலதாவையும் பற்றி விமர்சிக்க அதிமுக பேச்சாளர்களுக்கு ஜெயலலிதா திடீர் தடை விதித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே 16-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி ஒவ்வொரு கட்சியினரும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன.
இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படுபவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவர் தனித்து போட்டியிட்டு இந்த தேர்தலை சந்திப்போம் என கூறிவிட்டார். ஆனாலும் கட்சிகள் அவரை விட்டபாடில்லை, தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தேமுதிக, திமுக கூட்டணிக்கு போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததில் முக்கியமான கட்சி அதிமுக. இந்நிலையில் அவர் தனித்து போட்டி என்று அறிவித்ததும் அதிகம் சந்தோஷப்பட்டதும் அதிமுகவினர் தான். ஆனால் மறுபடியும் விஜயகாந்த் உடனான கூட்டணி படலத்தை ஆரம்பித்து விட்டன முக்கியமான கட்சிகள் என தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் அதிமுக தலைமை, விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை சிதறவிட வேண்டும் என்பதே அவர்கள் இலக்காக பார்க்கப்படுகிறது.
இதனால் மீண்டும் விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு மனசு மாறி சென்றுவிடக்கூடாது என்பதில் அதிமுக கவனமாக உள்ளது. எனவே விஜயகாந்தை விமர்சித்து அவரை கோபமூட்ட வேண்டாம் கொஞ்சம் மென்மையாகவே இருப்போம் என அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜயகாந்தையும், பிரேமலதாவையும் விமர்சிக்காமல், திமுக-காங்கிரஸ் கூட்டணியை மட்டுமே கடுமையாக விமர்சிக்க அதிமுக பேச்சாளர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால், இந்த முறையும் ஆட்சியை கைப்பற்றுவதில் ஜெயலலிதா கவனமாக உள்ளார். இதனால் அரசியல் சதுரங்கத்தில் ஒவ்வொரு நகர்வையும் ஜெயலலிதா கவனமாகவும், திட்டமிடுதலுடனும் நகர்த்தி ஆடுவதாக பேசப்படுகிறது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment