பாகுபலி இரண்டாம் பாகத்தில் ஸ்ரேயா...?
பிரமாண்டமாக தயாராகும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் புதிதாக நடிகை ஸ்ரேயாவும் இடம் பெறுவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ராணா, பிரபாஸ், சத்யராஜ் என அனைவரும் உள்ளனர்.
கூடுதலாக ராணாவின் மனைவி கதாபாத்திரத்தில் ஸ்ரேயாவை நடிக்க வைக்கவிருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தின் 3- வது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் ஸ்ரேயா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.
இரண்டாம் பாகம் 2017 ஏப்ரல் 14 அன்று திரைக்கு வருகிறது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment