ஷங்கரின் 2.0 கிளைமாக்ஸ் முடிந்தது
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துவரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான, 2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுமையாக எடுக்கப்பட்டுவிட்டது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அடுத்த ஷெட்யூல் தொடங்க உள்ளது.
2.0 படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. சமீபத்தில் ரஜினி, அக்ஷய் குமார் மோதும் சண்டைக் காட்சியை டெல்லியில் உள்ள மைதானத்தில் எடுத்தனர். நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சியில் ராணுவ டாங்குகள், விலையுயர்ந்த கார்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய படங்களில் இந்த சண்டைக்காட்சிக்கே அதிகம் செலவளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது டெல்லி படப்பிடிப்பு முடிந்து படப்பிடிப்புக்குழு சென்னை திரும்பியுள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த இந்த டெல்லி சண்டைக் காட்சிதான் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி என படக்குழு தெரிவித்துள்ளது. ஷங்கர் எதிர்பார்த்தபடி மிகப்பிரமாண்டமாக இந்த சண்டைக் காட்சி வந்துள்ளது.
படத்தின் அடுத்த ஷெட்யூல்ட் சென்னையில் தொடங்குகிறது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment