தேர்தல் பிரச்சாரத்தின் போது, தரக்குறைவாக கமெண்ட் அடித்த நபரிடம், நடிகர் சரத்குமார் கோபப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரத்குமார் தற்போது அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தை முடித்து விட்டு, தனது வேனில் கிளம்பிச் சென்றார். அப்போது அங்கிருந்த டீக்கடையில் நின்றிருந்த ஒரு நபர் சரத்குமாரைப் பார்த்து தரக்குறைவாக கமெண்ட் அடித்தார். இதைக் கேட்ட சரத்குமார், தனது வேனை நிறுத்த சொல்லி, கீழே இறங்கி நேராக அந்த டீக்கடைக்கு சென்றார். நேராக கமெண்ட் அடித்தவரிடம் சென்ற சரத்குமார் “நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று எனக்கு தெரியாது. ஆனால் மரியாதையாக பேச வேண்டும். நான் ஒரு ஆள் 10 பேரை சமாளிப்பேன். இது தேர்தல் நேரம் என்பதால் அமைதியா போகிறேன்” என்று கோபமாக கூறினார். அதன்பின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவரை சமாதனப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால், சிறுது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

No comments:
Post a Comment