தான் பேசிக் கொண்டிருக்கும் போது கூச்சல் போட்ட தொண்டர்களை பார்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் விஜயகாந்த், நேற்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பேசினார். அந்த மேடையில் இருந்த த.மா.கா வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போது சிலர் கூச்சல் போட்டார்கள். அமைதியாக இருங்கள் என்று அவர் பொறுமையாக கூறினார். ஆனால், சிலர் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.
இதனால் கோபமடைந்த அவர் “நான் கூறிக்கொண்டே இருக்கிறேன். எவன் டா அங்கே கத்திக்கொண்டே இருப்பது” என்று கத்தினார்.
அதன்பின், மேடையை சுற்றி வந்து எல்லோருக்கும் கை காட்டினார். பின் மைக் அருகில் வந்து “எல்லோருக்கும் டாடா காட்டிட்டேன். எல்லோருக்கும் கெஞ்சி கேட்டுப் பாத்துட்டேன். இதற்கு மேலும் கேட்கவில்லை என்றால், நான் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.
அதன்பின் அவரை ஒரு செய்தியாளர் புகைப்படம் எடுத்தார். அதற்கும் கோபப்பட்ட அவர் “என்னை புகைப்படம் எடுங்க என்று கூறி, அவருக்கு சல்யூட் அடித்து போஸ் கொடுத்தார்”
No comments :
Post a Comment