புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!

Share this :
No comments


''திராட்சை, ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ரத்தக் குழாய்ச் சுவரைத் தளர்வாக்கி, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்களை, போதுமான அளவு கிடைக்கச் செய்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும்... மலச்சிக்கலைப் போக்குவதற்கும் அருமருந்து!

செல் அளவில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் வீக்கங்கள்தான் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம். திராட்சையில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் வேதிப்பொருட்கள், ஒரு புற்றுநோய்த் தடுப்பாக மாறுகிறது. மார்பகப் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், ப்ராஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிரான ஆற்றல் திராட்சையில் உள்ளதாக, பல ஆய்வுகள் கூறுகின்றன.

தேர்வு நேரங்களில் மாணவர்கள், சிறிது உலர் திராட்சைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் சோர்வு, மறதி ஆகியவற்றைத் தவிர்க்கலாம். சுறுசுறுப்பும் கிடைக்கும். அதிகப்படியான மது உட்கொள்பவர்கள், ஆல்கஹாலினால் உடல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சைப் பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

திராட்சையைக் கொண்டாடுவோம்!

No comments :

Post a Comment