ரஜினிகாந்த் பின்வாங்கியதைப் போல், நான் பின் வாங்க மாட்டேன் என்றும் எப்போதும், யாருக்கும் பயப்பட மாட்டான்; நல்ல மனதிற்கு மட்டும்தான் பயப்படுவான் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக பேசினார்.
நேற்று, திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருத்தணி ரயில் நிலையம் அருகே நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ”அதிமுகவினருக்கு ஜெயலலிதாவை குளிர்விக்க வேண்டும். திமுகவினருக்கு கருணாநிதியையும், ஸ்டாலினையும் குளிர்விக்க வேண்டும். அவர்களுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை. முடியட்டும், விடியட்டும் என கூறி பிரச் சாரம் செய்து வருகின்றனர். அது அவர் களுக்கே தீங்காக முடியப் போகிறது.
தமிழகத்தில் திமுக 5 தடவையும், அதிமுக 3 தடவையும் மாறி, மாறி ஆட்சி செய்து குட்டி சுவராக்கி விட்டார்கள். மழை வந்தபோது நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம். நீங்கள் திரும்ப, திரும்ப அவர்களுக்கு வாக்களித்தால் அதே கதி தான் ஏற்படும்.
எனது கஜேந்திரா திரைப்படத்திலிருந்த காட்சிகளை பாமகவினர் நீக்கச் சொன்னார்கள். ஆனால், விஜயகாந்த் எப்போதும், யாருக்கும் பயப்பட மாட்டான். நல்ல மனதிற்கு மட்டும்தான் பயப்படுவான்.
நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தார்கள். எனக்கு பயம் இல்லை. பணம்தானே போனால் போகட்டும். ரஜினிகாந்த் மாதிரி நான் யாருக்காகவும் பின்வாங்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
No comments :
Post a Comment