‘முதல்வன்’ படத்தில் முதலமைச்சர் ரகுவரனை அர்ஜுன் டி.வி பேட்டி எடுப்பதுபோல் கேப்டன் விஜயகாந்த் முதல்வராகி (கற்பனைதான் பாஸ்) அவரை பேட்டி எடுத்தால்...
‘‘எல்லாப் பொதுமக்களும் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் ஏதாவது ஓர் அரசியல் கட்சி நமக்கு நல்லது செய்யும்னு நம்பிக்கையிலதான் ஓட்டுப்போடுறாங்க. ஆனா அவங்களுக்கு மிஞ்சுறது என்னமோ ஏமாற்றமும் அதிருப்தியும்தான். இந்தக் குற்றச்சாட்டு உங்க கட்சி மேலேயும் இருக்கு. இதுக்கு காரணம் என்னங்கய்யா?’’
‘‘என்ன சொல்றீங்க நீங்க. அவன் அவன் ஃபேஸ்புக்குங்கிறான். வாட்ஸ்-அப்புங்கிறான். ஸ்டேட்டஸ் நல்லா இருந்தா காப்பி பண்ணிப் போடுறான். மொக்கைப் படத்துக்கும் விமர்சனம் போடுறான், எல்லோரும் கேப்டன் குடிநீர் குடிக்கிறாங்க, கேப்டன் உணவகத்துல சாப்பிடுறாங்க, கடந்த அஞ்சு வருஷத்துல வேனுக்குள்ளே வெச்சு நான் யாரையாவது அடிச்சதா செய்தி வந்திருக்கா? சொல்லுங்க.’’
‘‘ஐயா நீங்க சொல்ற மாதிரி உங்க கட்சிக்காரங்க யாரும் கேப்டன் உணவகத்துல சாப்பிடுறதில்லை, கேப்டன் தண்ணியை வாங்கிக் குடிக்கிறதில்லை. அடித்தட்டு மக்கள்தான் இதையெல்லாம் செய்றாங்க ஐயா.’’
‘‘குற்றம் சொல்றவங்க சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க, நான் பேசும்போது கை தட்டுறவங்களோட எண்ணிக்கை 62 சதவிகிதம் கூடியிருக்கு.’’
‘‘ஆனா பா.ஜ.க-வுல 100 சதவிகிதம் இருக்கேய்யா.’’
‘‘குழப்பிப் பேசுறதுல உலக அளவில் 7-வது இடத்தில் இருந்த நான் 4-வது இடத்துக்கு வந்திருக்கேன்.’’
‘‘வெங்கலப் பதக்கம் வாங்குறவனை விட தங்கப் பதக்கம் வாங்குறவனுக்கு மதிப்பு ஜாஸ்தி இல்லீங்களாய்யா?’’
‘‘தே.மு.தி.க கட்சியை விட்டு ஓடிப்போறவங்களுடைய எண்ணிக்கை 35 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதமா குறைஞ்சிருக்கு.’’
‘‘அவங்களும் எத்தனை நாளைக்குதான் கைக்காசையே போட்டு செலவு பண்ணுவாங்க ஐயா?”
‘‘தம்பி, புள்ளி விபரம் சரியாத் தெரிஞ்சுகிட்டுத்தான் பேசணும்.’’
‘‘ஓகே. ஒரு நிமிஷம். ஐயா இது ஃபேஸ்புக் ரிப்போர்ட், இது வாட்ஸ்-அப் ரிப்போர்ட், இது டெலிகிராம் ரிப்போர்ட் அண்ட் திஸ் இஸ் டைம் பாஸ் ரிப்போர்ட். தி.மு.க-வை நம்பவெச்சு பழத்தை நழுவ விடுறது மாதிரி போக்குக் காட்டி கடைசியா ஏமாத்திட்டீங்கனு உங்க மேல அப்போ புகார் கொடுத்திருக்காங்க. பாருங்க’’
‘‘அது உங்களுக்குத் தெரியாது தம்பி, தி.மு.க. எங்க கட்சியையே அவங்ககிட்ட அடமானம் வைக்கிற மாதிரி ஆயிரத்தெட்டு கண்டிசன்ஸ் போட்டாங்க.’’
‘‘அது என்னங்க. கொஞ்சம் விபரமா சொல்லுங்க.’’
‘‘அதை உங்கிட்ட சொல்றதுக்கில்லை, என் தொண்டர்கள்கிட்டே சொல்லிக்கிறேன்.’’
‘‘தொண்டர்கள்தான் பார்க்கிறாங்க. சொல்லுங்க.’’
‘‘தம்பி அது ஆஃப்லைன்ல நடந்த மேட்டர், என்னைவிட வைகோ தெளிவா சொல்வார். அவர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி சாவகாசமா கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. அடுத்த கேள்வி.’’
‘‘ஐயா நீங்க அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி...’’
‘‘பெரிய ஆக்ஷன் ஹீரோப்பா.’’
‘‘நிஜ வாழ்க்கையிலும் அப்படியே நினைச்சிக்கிட்டு தூக்கியடிக்கிறது நியாயமா ஐயா?’’
‘‘வேணும்னா என் மேல வழக்குப் போடுங்க, நீதிமன்றத்துல நான் வந்து நிரபராதின்னு நிருபிக்கத் தயார். விஜயகாந்தா இருக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா, என்னைக்காவது தே.மு.தி.க. ஆபீஸ் வந்துருக்கியா? வந்து பார். எவ்வளவு பேட்டிகள், எவ்வளவு உளறல்கள், எத்தனை மீம்ஸ், எத்தனை ஜிஃப்னு உட்கார்ந்து இருக்கிறவனுக்குதான் தெரியும். எதையும் எடுத்தோமா, கவுத்தோமானு முடிவு எடுக்க முடியாது.’’
‘‘என்னது! நான் கேப்டனாவா? இது வாதத்துக்கு வேணா நல்லா இருக்கலாம். ஆனா நடக்கிற காரியமா?’’
‘‘ஏன் பா.ஜ.க-வுல எனக்குப் பதிலா விஜயகுமாரை சேர்க்கலையா... அது மாதிரிதான்.’’
‘‘நீங்க ஜோக் அடிக்கிறீங்க’’
‘‘நான் சீரியஸாதான் சொல்றேன்.’’
‘‘இல்லைங்க. அது என் வேலை இல்லைங்க.’’
‘‘சொன்னவுடனே ஜகா வாங்குற பார்த்தியா, அதான் என்கிட்டே விளையாடக் கூடாதுனு சொல்றது. துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு துப்பாய தூதூதூவும் மழை. உன்ன மாதிரி ஒரு ஆளுகிட்ட நேரடியா சவால் விட்டா, பின் வாங்குற பார்த்தியா. என்ன, இருந்து பார்க்கிறியா ஒரு நாளு. லைவ் ரிலே ஓடிக்கிட்டிருக்கு தம்பி, மக்கள் பார்த்துக்கிட்டிருக்காங்க. பதில் சொல்லுங்க. இல்லை பேட்டியை முடிச்சுக்கலாமா?’’
No comments :
Post a Comment