தள்ளிப்போன விஷால் படம் - ஷோலோவாக வெளியாகும் மனிதன்
வரும் 29 ஆம் தேதி உதயநிதியின் மனிதன் படமும், விஷாலின் மத கஜ ராஜா படமும் வெளியாவதாக இருந்தது.
சுந்தர் சி. இயக்கத்தில், விஷால், வரலட்சுமி நடித்துள்ள மத கஜ ராஜா 2013 பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட படம். தயாரிப்பாளரின் கடன்கள் காரணமாக இதோ அதோ என்று மூன்று வருடங்களாக இழுத்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 29 படம் வெளியாவது உறுதி என்றிருந்தவேளையில் மீண்டும் பட வெளியீடு தள்ளிப் போயுள்ளது.
ஏப்ரல் 29 வெளியாவதாக சொல்லப்பட்ட படம் மே 13 -ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த திடீர் தேதி மாற்றத்தால் 29 -ஆம் தேதி மனிதன் ஷோலோவாக களம் காணுகிறது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment