Wednesday, April 27, 2016

மசாஜ் செய்ய கேரளா சென்ற மு.கஸ்டாலின்: போட்டு தாக்கும் ராகவன்


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிற சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுபவர் கே.டி.ராகவன். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பில் பங்கேற்று எத்தகைய விமர்சனங்கள் வைத்தாலும் சற்று சிந்திக்கும் அளவுக்கு புள்ளிவிவரங்களுடன் பதில் அளிக்க கூடியவர் கே.டி.ராகவன். இவர் கொளத்தூரில் மு.க.ஸ்டாலினுக்கு கடும் போட்டியாக இருப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கே.டி.ராகவன் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளார். நமக்கு நாமே என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த ஸ்டாலின் சென்னை மழை வெள்ளத்தின் போது தனது தொகுதியான கொளத்தூருக்கு ஏன் வரவில்லை என்றார். தனது தொகுதி வெள்ளத்தில் மிதக்கும் போது ஸ்டாலின் ஏன் கேரளா போனார்? மசாஜ் பண்ணுவது மக்களுக்கு ஆறுதல் சொல்வதை விட அவ்வளவு முக்கியமா? என புதிய குண்டை வீசியுள்ளார் கே.டி.ராகவன்.

No comments:

Post a Comment