முதலாளிக்கு ஆரஞ்சு ஜூஸில் தனது சிறுநீரையும் கலந்து கொடுத்த வேலைக்கார பெண்- வீடியோ

Share this :
No comments


ஆரஞ்சு ஜூஸ் கேட்ட முதலாளிக்கு பணிப்பெண் ஒருவர் சிறுநீரை கலந்து கொடுத்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் மீது முதலாளி குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. காரணம் வேலைக்கார பெண் கொடுத்த ஜூஸை குடித்ததால் முதலாளி குடும்பத்தாருக்கு குமட்டல் ஏற்பட்டது. ஜூஸில் ஏதோ கலக்கிறாரா? என்று சந்தேகம் அடைந்த முதலாளி குடும்பத்தினர் இதனைக் கண்டுபிடிக்க பணிப்பெண்ணுக்கு தெரியாமல் சமையல் அறையில் கேமரா வைத்தனர்.

இது தெரியாத வேலைக்கார பெண் வழக்கம்போல முதலாளிக்கு ஜூஸ் தயார் செய்து கொடுத்துள்ளார். வேலைக்கார பெண் வெளியே சென்றதும் வீடியோ காட்சிகளை பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஆரஞ்சு ஜூஸ் தயாரித்த அந்த பெண் அதில் தனது சிறுநீரை டம்ளரில் பிடித்து ஜூஸில் கலந்து கொடுத்துவந்தது தெரியவந்தது. அந்த வீடியோ காட்சி சமூக வலைதலங்களில் பரவி வருகிறது.

No comments :

Post a Comment