தானியங்கியாக யாகூ மின்னஞ்சலில் பதில்மின்னஞ்சலை அனுப்பச் செய்தல்
நம்மில் பெரும்பாலானவர்கள் அடிக்கடி வெளியூர்களுக்கு செல்பவர்களாகவும் பல்வேறு இதர பணிகளை செய்துகொண்டும் உள்ளோம் அதனால் நமக்கு யாகூ மின்னஞ்சலில் வரும் மின்னஞ்சல்களை உடனுக்குடன் நம்மால் படித்து பதில் செயல் செய்யமுடியாத நிலையில் இருப்போம் அந்நிலையில் நமக்கு மின்னஞ்சல் அனுப்பிடும் நம்முடைய நண்பர்கள் நம்மை மரியாதை தெரியாதவனாக இருக்கின்றானே என தவறாக எண்ணிட வாய்ப்புண்டு இதனை தவிர்க்க நாம் இல்லாதபோது அந்த காரணத்தை கூறும் பதில் மின்னஞ்சல் உடனுக்குடன் செல்லுமாறு அமைத்திடமுடியும் இதற்காக நம்முடைய யாகூமின்னஞ்சலின் பக்கத்திற்கு உள்நுழைவு செய்திடுக அதில் வலதுபுறம் மேலே பற்சக்கரம் போன்ற Setting என்ற அமைவை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Setting என்ற அமைவு உரையாடல் பெட்டியின் திரையில் Vacation Response என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் எந்தநாளிலிருந்து எந்தநாள்வரை என்பதையும் “மிக்கநன்றி தவிர்க்கமுடியாத காரணத்தினால் அல்லது அவசரவேலையாக வெளியூர் செல்வதால் தற்போது தங்களின் மின்னஞ்சலை பார்வையிடமுடியவில்லை ………. நாளன்று திரும்பியவுடன் மின்னஞ்சலை பார்வையிடுகின்றேன் என்றும் தங்கள் உண்மையுள்ள“ என்றவாறு பதிலை தயார்செய்து அமைத்திட்டால் போதும் நாம் பார்வையிடாத போதுஉடனுக்குடன் பதில்மின்னஞ்சல் அனுப்பட்டுவிடும்.
Labels:
information
,
other
No comments :
Post a Comment