அனைத்து காலங்களிலும் விலை மலிவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. விலை குறைவில் கிடைப்பதால் தான் என்னவோ பலரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் இப்பழத்தில் மற்ற பழங்களில் நிறைந்துள்ள சத்துக்களை விட ஏராளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் நார்ச்சத்துக்கள், கரோட்டீன், வைட்டமின் சி போன்ற கனிமச்சத்துக்களும், அர்ஜினைன் மற்றும் கார்பைன் போன்ற அத்தியாவசிய நொதிகளும் உள்ளன. சரி, கோடையிலும் அதிகம் கிடைக்கும் இந்த பப்பாளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
செரிமான கோளாறுகள் பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் செரிமான நொதி, செரிமான கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பதோடு, மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை உணவு உட்கொண்ட பின் உட்கொண்டால், எளிதில் உண்ட உணவு செரித்து, வயிறு உப்புசம் அடையாமல் இருக்கும்.
இதய நோய்கள் பப்பாளியை தினமும் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். எனவே உங்களுக்கு இதய பிரச்சனைகள் ஏதேனும் நேராமல் இருக்க வேண்டுமானால், பப்பாளியை தினமும் சிறிது உட்கொள்ளுங்கள்.
கொலஸ்ட்ரால் குறையும் பப்பாளியை சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
அழற்சி அல்லது வீக்கம் பப்பாளியை அன்றாடம் உட்கொள்வதால், அதில் உள்ள தனித்தன்மை வாய்ந்த நொதிகள், உடலினுள் நாள்பட்ட அழற்சி அல்லது வீக்கம் ஏற்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.
நோயெதிர்ப்பு சக்தி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், பப்பாளியை சாப்பிடுங்கள். ஏனெனில் இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தும்.
எடை குறையும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு பப்பாளி மிகவும் சிறப்பான பழம். இதனை அன்றாட உணவில் எடையைக் குறைக்க நினைப்பவர் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து உணவை எளிதில் செரிமானமடையச் செய்து, கொழுப்புக்கள் உடலில் தங்குவதைத் தடுப்பதோடு கரைத்தும் வெளியேற்றி, உடல் பருமனடைவதைத் தடுக்கும்.
பொலிவான சருமம் பப்பாளியை உட்கொண்டு வந்தால், சருமப் பொலிவு மேம்படும். இதற்கு அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதி தான் காரணம். இது தான் இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்துக் கொள்கிறது. இப்பழத்தை உட்கொள்வதுடன், மசித்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தாலும் நன்மை கிடைக்கும்.
No comments :
Post a Comment