மே 20 சிம்பு, நயன்தாரா ரொமான்ஸை பார்க்கலாம்

Share this :
No comments


ஒருவழியாக இது நம்ம ஆளு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். மே 20 படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இது நம்ம ஆளு படத்துக்கு விநியோகஸ்தர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து ஏரியாக்களிலும் படம் நல்ல விலைக்கு கேட்கப்பட்டது. ஆனால், வாலு படத்தை வெளியிட்டதில் ஏற்பட்ட கடன்கள் காரணமாக டி.ஆரால் இது நம்ம ஆளு படத்தை வெளியிட முடியாமல் இருந்தது. தற்போது பிரச்சனைகள் ஒருவழியாக பேசி தீர்க்கப்பட்டு படம் வெளிவருவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

வரும் மே 20 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்தமுறை படவெளியீடு தள்ளிப் போகாது என்று நம்புவோம்.

No comments :

Post a Comment