Wednesday, May 18, 2016

ரஜினியை கடத்த திட்டம்: அம்பலப்படுத்திய ராம்கோபால் வர்மா



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கடத்த சந்தனக்கடத்தல் வீரப்பன் திட்டம் தீட்டினார் என அவ்வப்போது விவகாரமான கருத்துக்களை கூறுவதில் பிரபலமான இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.


சந்தனக்கடத்தல் வீரப்பனை பற்றிய மர்மங்கள் நிறைந்த திரைப்படம் ஒன்றை வீரப்பன் என்ற பெயரில் படமாக்கியுள்ளார் ராம்கோபால் வர்மா. இந்நிலையில் ரஜினியை கடத்தி அதன் மூலம் பிரபலமாக வீரப்பன் நினைத்ததாக ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ரஜினியை விட புகழ்பெற நினைத்த வீரப்பன், ஒருகட்டத்தில் அவரை கடத்தி, அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு தன்னை பற்றி திரைப்படம் எடுக்க நினைத்தார் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி ரஜினி ரசிகர்களிடமும், தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment