Wednesday, May 18, 2016

அட போட வைக்கும் ரஹ்மானின் வேகம்



ரஹ்மான் எப்போதும் சொல்லும் ஒரு விஷயம், கடைசி நேரத்தில் வந்து டியூன் குடுங்க, பாட்டு குடுங்க என்று நெருக்கடி தராதீர்கள்.

லிங்கா படத்திற்கு அப்படித்தான் நெருக்கடி கொடுத்தார்கள். அதன் ரிசல்ட் என்ன என்பது உங்களுக்கே தெரியும்.

ராஜீவ் மேனன் இயக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதமே தொடங்குகிறது. ஆனால், அதற்குள் இரண்டு பாடல்களின் கம்போஸிங்கை முடித்துள்ளார் ரஹ்மான். படப்பிடிப்பு தொடங்குவதற்குள் அனைத்துப் பாடல்களின் கம்போஸிங்கையும் முடித்துவிடுவார் என நம்பிக்கை தெரிவிக்கிறது படக்குழு.

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களுக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் இந்தப் படத்தில் நாயகனாக ரஹ்மானின் சகோதரியின் மகனும், இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் நடிக்க உள்ளார்.

No comments:

Post a Comment