விஜய் மல்லையா ராஜினாமா கடிதம்: மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறந்தார்
கடன் ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள விஜய் மல்லையா, தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரிக்கு அனுப்பினார்.
மாநிலங்களவை குழு, விஜய் மல்லையாவுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தது. அக்கடிதத்தில், கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கி, நீதிமன்றத்தில் ஆஜராகாமல், இங்கிலாந்தில் இருந்துக் கொண்டு இந்தியாவுக்கு வர எண்ணம் இல்லை என்று கூறும் உங்களை ஏன் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, அந்த கடிதத்திற்கு பதில் கடிதமாக விஜய் மல்லையா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
மேலும், ராஜினாமா செய்வதன் மூலம் தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும், இங்கிலாந்தில் வசிப்பதாலும் தைரியமாக ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment