136 ஆண்டுகளில் பிப்ரவரியில் பதிவான வெப்ப அளவு இவ்வளவா? நாசாவின் அதிர்ச்சி தகவல்
கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது, கடந்த பிப்ரவரி மாதம்தான் அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த மாதம்தான் அதிகளவு வெப்பம் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும், அது பிப்ரவரி மாதத்தில் 1.35 டிகிரி செல்சியசாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும் போது, பிப்ரவரி மாதத்தில் பதிவானது அதிகளவு வெப்பநிலை என நாசா தெரிவித்துள்ளது.
மனிதர்களால் வெளியான அசுத்த வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும், எல்நினோ காரணமாக இந்த பருவநிலை மாறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
1880-ம் ஆண்டு முதல் உலக அளவிலான வெப்ப நிலை மாற்றம், மழை அளவு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
others
No comments :
Post a Comment