விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வார் – பிரேமலதா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வார் என்று தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி நகரில் தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியதால்தான் ஊழலுக்கு சிறிதும் தொடர்பில்லாத தலைவர்களுடன் இணைந்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்க வேண்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும், விவசாயிகளை முதலாளியாக மாற்ற புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற பேரத்தைத்தான் தேமுதிக பேசும்.
பண பேரம் பேசாது. ஊடகங்களில் வந்ததைச் சொன்னதற்காக வழக்கு தொடுக்க நினைக்கும் திமுகவின் முடிவு சரியானதல்ல. வைகோவுக்கு அனுப்பிய நோட்டீஸை திமுக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் சட்டப்படி அந்த வழக்கை வைகோ சந்திப்பார்.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்ததும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்வார், அதிமுக, திமுகவுக்கு மாற்று இல்லை என்ற எண்ணத்தில் இருந்த மக்கள் புதிதாக உருவாகியுள்ள தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment