500 ஆண்டுகளுக்கு முந்தைய வாஸ்கொடகாமாவின் கப்பல் கண்டுபிடிப்பு

Share this :
No comments


ஓமன் கடற்பகுதியில் கிடைத்திருக்கும் கப்பலின் சிதைந்த பாகங்கள், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவின் பாதுகாப்பு கப்பலாக இருக்கலாம் என ஆய்வாளர்களால் கருதுகின்றனர்.

வாஸ்கொடகாமாவின் பாதுகாப்பு கப்பலான எஸ்மெரல்டாவின் மாதிரி
1503 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமாவின் பாதுகாப்பு கப்பலான எஸ்மெரல்டா, இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகளில் ஒன்றான அல்-ஹல்லானியா தீவின் அருகே சென்றபோது உண்டான பெரும்புயலால் மூழ்கியதில் தளபதி வின்சென்ட் சொட்ரே மற்றும் அதில் பயணித்த அனைவரும் மரணமடைந்தனர்.

இந்நிலையில், தற்போது ஓமன் கடற்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கப்பலின் சிதைந்த பாகங்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியா செல்லும் வழியில் நொறுங்கிய வாஸ்கோடகாமாவின் எஸ்மெரல்டா கப்பலாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஏனெனில், இந்த கடல்பகுதியை ஆராய்சி செய்துவரும் நீர்மூழ்கியாளர்கள், சில பொருட்களை கண்டறிந்துள்ளனர். அந்த சிதைந்த பாகங்களுக்கு இடையில், கற்கள், மட்பாண்டங்கள், குப்பைகள் மற்றும் மணி ஒன்றினையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், அரிய வகையான வெள்ளி நாணயமும், கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நாணயங்கள் 1499ஆம் ஆண்டு வாஸ்கொடகாம முதன்முறையாக இந்தியா வந்திருந்த போது பயண்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

கப்பல் மூழ்கியதாக ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து ஒட்டுமொத்தமாக 2800 பொருட்களை ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர். புதிதாக மீட்கப்பட்டுள்ள இந்த தொல்பொருள்கள் வாஸ்கோடகாமா குறித்து மேலும் பல தகவல்களை உலகிற்கு வழங்கலாம் என ஆய்வாளர்கள் கருகின்றனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறுகையில், “இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. ஹாலிவுட் கதைகளை படிப்பதைப் போல உள்ளது இது.

ஓமனின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் தொல்பொருள் ஆய்வுமைய மேற்பார்வையாளர் அயோப் அல்-புசைடி கூறுகையில், “ஓமனுக்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வர்த்தக தொடர்பினையும், ஒமனுக்கு வெளியே உள்ள ஆவண காப்பகங்கள் உறவுகள் பற்றியும் ஆராயப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment