கரூர் மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி கல்குவாரிகள் மூடப்பட வேண்டுமென சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதற்கு இயற்கை ஆர்வலர்கள் மட்டுமில்லாமல் விவசாயிகள் மற்றும் பொது நல ஆர்வலர்களும் கல் குவாரிகளை மூடக் கோரி போர்கொடி தூக்கியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக அதாவது 1990 முதல் சுமார் 200-க்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற மற்றும் பெறாத கல்குவாரிகள் என சுமார் இன்று வரை 400 க்கும் மேற்பட்டசெயல்பட்டு வந்தன.
இதையடுத்து, புதிதாக கல்குவாரிகளுக்கு லைசென்ஸ் பெற வேண்டுமானால், 7 வேறுபட்ட துறையின் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். பொதுவாக கல்குவாரிகளின் அனுமதி காலம் 5 ஆண்டுகள் தான். அதன் பின்பு உரிமத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். என்றும் கரூரில் சமீப காலமாக புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்கவும், உரிமத்தை நீட்டிப்பு செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டதாக நடிக்கிறது.
கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில்,புதிய கல்குவாரிகளை அனுமதி இல்லை என்றும் கூறி வருகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் அதே காரணங்களையும், கஸ்தூரி ரங்கன் அறிக்கையையும் சுட்டிக்காட்டி, அதே மாவட்டத்தில் மிச்ச மீதி இருந்த கல்குவாரிகளுக்கும், அந்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.
ஆனால் கரூர் மாவட்டத்தில் கல்குவாரிகளை தடை செய்தால் கட்டுமானத்துக்கு தேவையான கருங்கல், ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில்லை எனவும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி பொதுமக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி வந்தனர்.
கரூர் மாவட்டத்தில் நொய்யல், க.பரமத்தி, புன்னம் சத்திரம், சி.கூடலூர், தென்னிலை, பொளத்திரம், சின்னதாராபுரம், பெரிய திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ற்கும் மேற்பட்ட கல் குவாரிகள் அனுமதி பெற்றும், ஒரு சில குவாரிகள் அரசியல் வாதிகளால் மிரட்டப்பட்டும் வைக்கப்பட்டிருந்தன. இன்றும் இயங்கி வருகின்றன. அதேவேளை, கல்குவாரிகளுக்கு எதிராக போராட தி.மு.க மற்றும் அ.தி.மு.க வும் முயலவில்லை.
காரணம் முன்னாள் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ க்கள் வரை தி.மு.க, அ.தி.மு.க என அனைத்து தரப்பினரும் ஆளுக்கு ஒரு கல் குவாரிகளை வைத்துள்ளனர். ஆகையால் அக்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே மழையளவும் குறைவு, மேலும் விவசாயம் நெல், கரும்பு, மஞ்சள், கம்பு, சோளம் ஆகியவை பயிரிட்டிருந்தாலும் அந்த பயிர்கள் இப்பகுதியில் பாயும் நொய்யல், காவிரி, அமராவதி ஆகிய நதிகளில் பாயும் சாய்க்கழிவால் பாதிக்கப்பட்டு வந்தன. வீடுகள் சேதமடையவும் இந்த கல் குவாரிகள் தான் காரணம். குவாரிகளில் பணிபுரிவோருக்கும் 'சில்கோசிஸ்' எனும் நுரையீரல் நோய் ஏற்படுகிறது.
மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள நிலங்களை குடைந்து எடுத்த கற்கள், ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் கேரளா, கர்நாடகா மாநிலம், ஆந்திர மாநிலம், பாண்டிச்சேரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. அதே நேரத்தில் கேரளாவில் மலைகளை அழிப்பதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் கல்குவாரிகள் அமைக்கக் கூடாது என, கஸ்தூரிரங்கன் அறிக்கைக்கு பின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதை பின்பற்றியே குமரி மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத் தலைமுறையினரின் நலன் காக்கும் நோக்கோடு, கல் குவாரிகளை தடை செய்திருப்பது வரவேற்கத்தக்கதே' என்றாலும் நிலத்தடி நீர் மட்டத்தை உறிஞ்சுவதோடு, அருகில் உள்ள வீடுகளுக்கு இடிகள் விழுவது போல் அடிக்கடி இந்த கல்குவாரிகளில் வெடிகள் வைப்பது பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த கல்குவாரிகளை நிறுத்தினால் வேலையின்மை, கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்டவை ஜீரணித்துக் கொள்ள முடியாத பிரச்சினைகள் தான். அதே நேரத்தில், அந்த பிரச்சினைகளுக்கான தீர்வு சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைக்கும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என்பது இவர்களின் கருத்து.
ஆகவே சுற்றுச்சூழலை காக்கும் வகையிலும், இயற்கையை காக்கவும் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை காக்க நல்ல முடிவை எடுக்க கரூர் மாவட்ட நிர்வாகம் முன்வருமா என்பது இயற்கை ஆர்வலர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும்.
No comments :
Post a Comment