நடிகர் அஜித் மீது நடவடிக்கை எடுக்குமா நடிகர் சங்கம்?
நடிகர் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும் நடிகர் அஜித் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் வருகின்றன.
பிரபல தமிழ் சினிமா நடிகர் அஜித். இவர் பல லட்சம் ரசிகர்களை கொண்டிருந்தாலும் தனக்கென்று ரசிகர் மன்றம் வேண்டாம் என அவற்றை கலைத்தவர். இருந்தாலும் இவரது படங்களுக்கு பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கும்.
தான் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர்கள் சந்திப்பு என எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவதில்லை. மேலும் சமீபகாலமாக நடிகர் சங்கம் நடத்தும் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்வதில்லை.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக் குழுவில் அஜித் பற்றிய இந்த நடவடிக்கை விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பல நடிகர்கள் வந்துள்ளனர்.
நடிகர் கமல் அமெரிக்காவில் இருப்பதால் அவர் ஸ்கைப் மூலம் கலந்துக்கொண்டார். ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை. தெறி படத்தின் இசை வெளியீட்டு இருந்ததால் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. நடிகர் அஜித்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் நடிகர் அஜித் நடிகர் சங்கம் தொடர்பான எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருப்பதால் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய நடிகர் சங்க தலைவர் நாசர் நடிகர் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி, பொதுக்குழு கூட்டம் போன்றவற்றில் கலந்துகொள்ள வலியுறுத்த உள்ளாராம்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment