கடவுள் ஒருவனே , என்கிறது பிற மதங்கள். ஆனால், இந்து மதத்தில் மட்டும் எதற்கு இத்தனை கடவுள்கள் , என்கிற கேள்வி நம் எல்லோர் மனத்திலும் நிகழும். மும் மூர்த்திகள் என்று கருதப்படுபவர்கள் கூட , ஒரு யோக நிலையில் இருப்பது போல நாம் எத்தனை படங்களில் பார்த்து இருக்கிறோம். அவர் யாரை எண்ணி தவம் செய்கிறார்.
மும்மூர்த்திகளுடன் . சதாசிவம், ருத்ரன், என்று - ஐந்து மூர்த்திகள் இருக்கின்றனராம். உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய அந்த கடவுள் ஒன்று தான்.
அவரைத்தான் சிவனும் , யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே. மீதி நாம் வணங்கும் அனைவரும், தேவதைகள், தெய்வங்கள் - அவதாரங்கள், ஒரு சில காரண, காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள்.
சித்தர்களுக்கு மேல் இருக்கும் உயர்ந்த நிலை, இந்த தெய்வங்கள். கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறிய சிலவற்றை பார்க்கலாம்... காரியம் நடக்க விக்னங்கள்,
இடையூறுகள் நீங்க - விநாயகர் செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன் மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி,
ஸ்ரீ ஆஞ்சநேயர் கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன்,
சந்தான லட்சுமி தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர் சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன் பில்லி, சூன்யம்,
செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர் அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி நோய் தீர நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர் காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன் ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு மாரடைப்பு,
இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன் நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன் பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி மூட்டுவலி,
கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார் வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான் பித்தம்- முருகன் வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர் எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன் ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான் குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன் அம்மை நோய்கள்- மாரியம்மன் தலைவலி, காய்ச்சல்- பிள்ளையார் புற்று நோய்- சிவபெருமான் ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு
No comments :
Post a Comment