திமுக, அதிமுகவுக்கு இதற்காகத்தான் ஓட்டு போடக்கூடாது- விஜயகாந்த் சொல்வது என்ன?

Share this :
No comments

60 ஆண்டுகளாக வாக்களித்து வாக்களித்து அதிமுக, திமுகவை பற்றி தெரிந்துகொண்டுவிட்டீர்கள். இந்த ஒரு தடவை தே.மு.தி.க.வுக்கு வாக்களியுங்கள் என்று வாக்காளர்களை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில், 2–ம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் அளித்த பேட்டியில், "ஏற்கனவே கடந்த 10ம் தேதி சென்னையில் தே.மு.தி.க. சார்பில் நடந்த மகளிர் தின பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். அதேபோல் தற்போது 2–ம் கட்டமாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருக்கும் இந்த சமயத்தில், நான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறேன். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஏன் தேர்தல் அறிக்கையை கொடுக்கவில்லை.

காரணம் அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். அவர்கள் ஆட்சி செய்யும் 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி, 80 ஆயிரம் கோடி, ஒரு லட்சம் கோடி என கொள்ளை அடிக்கிறார்கள். கொள்ளை அடிக்காதீர்கள் என்று நான் சொல்கிறேன். 60 ஆண்டுகளாக மக்களுக்கு இவர்கள் செய்யாததைதான் நான் செய்யப்போகிறேன்.

60 ஆண்டுகளாக நீங்களும் அவர்களுக்கு வாக்களித்து வாக்களித்து அவர்களை பற்றி தெரிந்துகொண்டுவிட்டீர்கள். எனவே இந்த ஒரு தடவை தே.மு.தி.க.வுக்கு, முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களாகிய உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்கிறேன். தே.மு.தி.க. வெற்றி பெற்றதும், தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

110 விதியின் கீழ் அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்று ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதை தான் நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த 2 கட்சிகளுக்கும் (அ.தி.மு.க–தி.மு.க.) நீங்கள் ஓட்டு போடாதீர்கள்.

தேர்தல் அறிக்கையில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றாலோ அல்லது குறைகள் இருந்தாலோ அந்த கருத்துகளை பொதுமக்களாகிய நீங்கள் captain16election@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம். இதுவரை நீங்கள் அனுப்பி வரும் கருத்துகளை தினந்தோறும் நான் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று கூறினார்.

No comments :

Post a Comment