டெல்லியில் சண்டையை தொடங்கிய ரஜினி
தமிழக சட்டசபை தேர்தல் நடக்கயிருக்கும் நேரம் ரஜினி எதற்கு டெல்லியில் சண்டையிடுகிறார் என்று நெற்றியை தேய்க்க வேண்டாம். இந்த சண்டை 2.0 படத்துக்காக.
டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ரஜினியும், அக்ஷய் குமாரும் மோதும் பிரமாண்ட சண்டைக் காட்சியை இன்று முதல் எடுக்கிறார் இயக்குனர் ஷங்கர். விதவிதமான கார்கள், ராணுவ டேங்குகள் இந்த சண்டையில் இடம்பெறுகின்றன. ஒரு மாத காலம் இந்த படப்பிடிப்பு நீடிக்கும் என படக்குழு கூறியுள்ளது.
லைக்கா பிரமாண்டமாக தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்க ஏமி ஜாக்சன் நாயகியாக நடித்து வருகிறார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment