விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி - கட்டுப்பாட்டை மீறும் கண்ணியம்

Share this :
No comments


இணையதளத்தின் பெரும் பயன்பாட்டிற்கு பிறகு புனிதம் என்பதே இல்லாமல் ஆனது. எதையும் கேள்வி கேட்க முடியும் என்ற நிலையை இணையம் உருவாக்கியது ஓர் ஜனநாயக செயல்பாடு. ஆனால், அதன் எல்லையை சிலர் அவ்வப்போது மீறுகின்றனர்.

கண்ணீர் அஞ்சலி என்ற வாசகத்துடன் சிலர் விஷாலின் படத்தை இணையத்தில் பரவவிட்டுள்ளனர். எங்களை பகைத்தால் இதுதான் கதி எனவும் அதில் வாசகம் உள்ளது.

இந்த கண்ணியமற்ற செயலை யார் செய்திருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினர் விரைந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாக உள்ளது.

No comments :

Post a Comment