தேர்தலுக்கு பின் அவதாரமெடுக்க காத்திருக்கும் பிரேமலதா?
தேமுதிக கட்சி ஆரம்பித்த பொழுது விஜயகாந்த் ஒருவரே அக்கட்சியின் அதிகாரமிக்க நபராக இருந்தார். ஆனால் தற்போது அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணியின் தலைவியுமான பிரேமலதாவின் விருப்பம் இல்லாமல் அங்கு ஒன்றும் நகர்வதில்லை. அந்த அளவுக்கு கட்சியின் அதிகார பலமாக திகழ்கிறார் பிரேமலதா.
இதற்கு சிறந்த உதாரணமாக சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் கூட்டணி அறிவிப்பையே சொல்கிறார்கள் கட்சி வட்டாரங்கள். தேமுதிக தனித்து போட்டி என்ற அறிவிப்பு தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கிறார்கள் தேமுதிகவினர்.
திமுகவுடன் கூட்டணி என்று எதிர்பார்த்த தொண்டர்களின் நம்பிக்கையை கெடுத்தவர் பிரேமலதாவே என கூறுகிறார்கள் தேமுதிகவினர். கட்சியினர் அனைவரும் திமுகவிடம் கூட்டணி வைக்க வேண்டும் என ஆரம்பம் முதலே விஜயகாந்திடம் வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் பிரேமலதாவுக்கு இந்த கூட்டணியில் விருப்பம் இல்லாததாலே தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜயகாந்தையும், கட்சியையும் பிரேமலதா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக கூறுகிறார்கள். தேர்தலுக்கு பின் விஜயகாந்தின் உடல்நிலையை காரணம் காட்டி பெயரளவுக்கு கட்சியில் அவரை பொம்மை போல் வைத்துவிட்டு, பிரேமலதா விஜயகாந்தின் இடத்தில் வருவார் என பேசப்படுகிறது.
தற்போது விஜயகாந்தை ஓரங்கட்டி, பிரேமலதாவை முன்னிறுத்தினால் கட்சிக்குள் குழப்பம் வரும் என்பதால், பிரேமலதா தேர்தல் முடியும் வரை காத்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பின் பிரேமலதாவின் எழுச்சியும், விஜயகாந்தின் வீழ்ச்சியையும் பார்க்கலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment