தேசிய கீதம் பாட பணம் வாங்கினாரா அமிதாப்பச்சன்?: கங்குலி விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதம் பாடப்பட்டது. இதில் இந்திய தேசிய கீதத்தை அமிதாப்பச்சனும், பாகிஸ்தான் தேசிய கீதத்தை அந்நாட்டு பாடகர் ஷபாகத் அமானத் அலியும் பாடினர்.
இந்நிலையில் தேசய கீதத்தை பாட அமிதாப்பச்சன் ரூ.4 கோடி பணம் வாங்கியதாக சமூக வலைதளத்தில் யாரோ கொளுத்தி போட அது மளமளவென பற்றி எரிந்தது. சமூக வலதளங்களில் பலர் அவரை திட்டி தீர்த்தனர். அவரது தேசப்பற்று குறித்தும் பலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் அவர் பணம் வாங்கவில்லை என மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி விளக்கமளித்துள்ளார். நிகழ்ச்சிக்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.30 லட்சம் செலவு செய்யும் நபரை உங்களால், கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? விமான டிக்கெட், ஹோட்டல் பில், டிக்கெட் போன்றவற்றை தனது சொந்தசெலவில் புக்கிங் செய்து உள்ளார் அமிதாப்பச்சன்.
கொஞ்சம் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு நான் அமிதாப் பச்சனிடம் கெஞ்சினேன். ஆனால் எனது அன்பை வெளிப்படுத்த இதை நான் செய்கிறேன் என்று அவர் மறுத்துவிட்டார் என கங்குலி கூறியுள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment