ஜெயம் ரவியை இயக்கப் போறேன் - சமுத்திரக்கனி

Share this :
No comments


நடிக்க ஆரம்பித்த இயக்குனர்கள் யாரும் பிறகு இயக்கத்தில் சோபித்ததில்லை. சேரன், தங்கர்பச்சான், சசிகுமார், அமீர் என்ற வரிசையில் சமுத்திரக்கனியையும் சேர்க்கலாம்.

தொடர்ச்சியாக நடித்து வருகிறவர் படம் இயக்கும் ஆசையை இதுவரை விடவில்லை.

அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக சமுத்திரக்கனி கூறியுள்ளார். இதற்கு முன் ஜெயம் ரவியை வைத்து இவர் இயக்கிய நிமிர்ந்து நில் தோல்விப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி தற்போது லக்ஷ்மண் இயக்கத்தில் போகன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ஏ.எல்.விஜய், சக்தி சௌந்தர்ராஜன், கௌதம், மோகன் ராஜா ஆகியோர் படங்களில் நடிப்பதாக வாக்களித்துள்ளார். இந்த ட்ராபிக்கில் இப்போது சமுத்திரக்கனியும் சேர்ந்துள்ளார்.

நசுங்காம வெளியே வரப்பாருங்க.

No comments :

Post a Comment