கருணாநிதியை சந்தித்து பேசினார் மு.க.அழகிரி : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Share this :
No comments


பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் அழகிரி சந்தித்து பேசியுள்ளார்.

திமுகவிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி, கருணாநிதியின் மகன் அழகிரி இரண்டு வருடங்களுக்கு திமுகவிலிருந்து விலக்கப்பட்டார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின் திமுகவிற்கு எதிராகவும், அவரது தம்பி ஸ்டாலினுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தார் அழகிரி.

ஸ்டாலின் தொடங்கிய நமக்கு நாமே சுற்றுப் பயணத்தை ‘காமெடி நிகழ்ச்சி’ என்று வர்ணித்தார். இதனால், திமுகவிற்கும் அவருக்கும் மோதல் போக்கே நீடித்து வந்தது.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்னம், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினார். கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் நிலவரம் குறித்தும், தொகுதி உடன்படிக்கைகள் குறித்தும் பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது.

கருணாநிதியை மு.க.அழகிரி சந்தித்த விவகாரம், திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments :

Post a Comment