உள்ளாடைகளை திருடும் திருட்டுப் பூனை : நியூசிலாந்தில் ருசிகரம்
நியூசிலாந்தில் ஒரு வீட்டில் வசிக்கும் ஒரு பூனை, அக்கம் பக்கத்தில் வசிப்பர்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் உள்ளாடை மற்றும் காலணி சாக்ஸ் ஆகியவைகளை திருடும் வித்தியாசமான பழக்கத்தைக் கொண்டுள்ளது.
நியூசிலாந்து ஹாமில்டன் நகரில் வசிப்பவர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பூனைதான் இந்த 6 வயது பிரிஜிட். இந்த பூனை இரவு ஆனதும் வீட்டிற்கு வெளியே சென்று, அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து அவர்களின் உள்ளாடை மற்றும் காலணி சாக்ஸ் ஆகியவைகளை நைசாக திருடிக் கொண்டு வந்து, தனது எஜமான் வீட்டில் வைத்துவிடும்.
அந்த பூனையை சாரா நாதன் என்பவர் வளர்க்கிறார். ஒவ்வொரு நாள் காலை சாரா எழுந்து பார்க்கும்போதும் புதிது புதிதாக உள்ளாடை மற்றும் சாக்ஸ் போன்றவை தன்னுடை வீட்டில் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இந்த செயலை செய்து வருகிறது இந்த பூனை.
அதன்பின், தான் வளர்க்கும் பூனைதான் இந்த செயலை செய்கிறது என்று தெரிந்ததும், இப்போது சாரா ஆன்லைனில் மன்னிப்பு கோரி, கூடவே ஒரு விளம்பரமும் கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய பூனை திருடிக் கொண்டு வந்து போட்ட உள்ளாடைகள் மற்றும் காலுறைகளின் புகைப்படங்களை பதிவு செய்து, அதற்கான உரிமையாளர்கள் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment